Hair Care Tips: தலைமுடி கருமையாக இல்லையே என்று கவலையில் உள்ளீர்களா???இந்த எண்ணெயை மட்டும் தினமும் பயன்படுத்தி பாருங்க. முடி கரு கருவென்று இயற்கையாகவே மாறிவிடும்.


Hair Care Tips in Tamil


பொதுவாக கருமை நிறம் இல்லாத தலைமுடி,பழுப்பு, பொன், சிவப்பு அல்லது வெளிர் நிறங்களில் காணப்படும். இது மரபியல், ஹார்மோன் நிலை, வயது, மற்றும் சில சமயங்களில் சுற்றுப்புறச் சூழல் காரணிகளால் ஏற்படுகிறது. இயற்கையாக கருமை நிற தலைமுடி இல்லாதவர்கள், அவர்களது முடியினை கருமையாக மாற்ற நிறைய முயற்சிகளை எடுத்திருப்பார்கள்.  ஆனால் அது பயனளிக்காமல் போயிருக்கலாம். சரியான பராமரிப்பு இருந்தால் முடி ஆரோக்கியமாகவும், இயற்கையான கருமை நிறத்தையும் கொண்டுவர முடியும்.

Hair Care Tips in Tamil

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே குறைவான செலவில் இயற்கையான எண்ணெயை தயாரித்து அதனை தலைமுடிக்கு பயன்படுத்தும் போது தேவையான ஊட்டச்சத்துகளை தலைமுடிக்கு  வழங்கி, வேர் முதல் நுனி வரை வலிமையை  சேர்க்கின்றன. இவை தலைமுடியின் இயல்பான ஈரப்பதத்தைப் பராமரித்து, நிறமாற்றத்திற்கு காரணமான ஆக்சிடேஷன் செயல்களைத் தடுக்க உதவுகின்றன. முறையாக மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் மேம்பட்டு, தலைமுடி ஆரோக்கியமாகவும், கருமை நிறத்திற்கும் மாறுகிறது. 

இப்பொது தலைமுடிக்கு பயன்படுத்தும் இயற்கையான எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று விரிவாகப் பார்க்கலாம்.


Hair Care Tips in Tamil

தேவையானப் பொருட்கள்:

  • சுத்தமான தேங்காய் எண்ணெய் - 250லி 
  • வெந்தயம் - 3 டேபிள்ஸ்பூன் 
  • கருப்பு எள் - 2 டேபிள்ஸ்பூன் 
  • சின்ன வெங்காயம் - 6 
  • செம்பருத்தி பூ - 3 
  • கருவேப்பில்லை - தேவையான அளவு 

முதலில், வெந்தயம், கருப்பு எள், கருவேப்பிலை, செம்பருத்திப் பூ ஆகியவற்றை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். பின், ஒரு கடாயில் சுத்தமான தேங்காய் எண்ணெயை ஊற்றி எண்ணெயை நன்கு கொதிக்கவிடவும். கொதித்த பிறகு, அரைத்து வைத்த  வெந்தயம், கருப்பு எள், கருவேப்பிலை, செம்பருத்திப் பூ சேர்த்த கலவையுள்ள பவுடரை அதனுடன் சேர்க்கவும். ஐந்து நிமிடம் அனைத்தும் ஒன்றோடு ஒன்று சேருமாறு நன்கு கிளறி விடவும். பின் வெட்டி வைத்த சின்ன வெங்காயத்தை அதனுடன் சேர்க்கவும். அனைத்தும் சேர்த்து நன்கு கொதித்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு சிறிது நேரம் எண்ணெயை ஆற விடவும். 


Hair Care Tips in Tamil

எண்ணெய் ஆறியதும் வெங்காயத்தை மட்டும் எண்ணெயில் இருந்து எடுத்து விடவும்.அரைத்த பவுடரை எண்ணெக்குள்ளே வைத்து கொள்ளுங்கள். அப்போதுதான் தலை முடிக்கு நல்ல பலன் கொடுக்கும். காய்ச்ச எண்ணெயை காற்று புகாத பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். தொடர்ந்து இரண்டு வாரம் இந்த எண்ணெயை பயன்படுத்தி பாருங்கள். உங்களுடைய தலைமுடி எந்த நிறத்தில் இருந்தாலும் கரு கருவென்று கருமை நிறத்திற்கு மாறிவிடும்.