Ad Code

நடிகை தமன்னா மாதிரி கொழு கொழுன்னு ஆகணுமா? உங்களுக்கான சீக்ரட் ஸ்மூத்தி(Smoothie) ரெசிபி.மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் வருத்தப்படுவீங்க...




உடல் எடை குறைவாக  இருப்பவர்கள் பெரும்பாலும் உடலுக்கு தேவையான போஷணச் சத்துகள் குறைவாகவே பெறுகின்றனர். இது உடல்நலனிலும் சக்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒல்லியானவர்கள் எளிதில் சோர்வடையும் வாய்ப்பு அதிகம், மேலும் நோயெதிர்ப்பு சக்தியும் குறைவாக இருக்கக்கூடும். சரியான உணவுமுறை, நேர்மையான தூக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை பின்பற்றுவதன் மூலம் ஆரோக்கியமான முறையில் எடையை அதிகரிக்க முடியும். ஒவ்வொரு உணவிலும் புரதச்சத்து, கொழுப்புசத்து மற்றும் கார்போஹைட்ரேட்கள் நிறைந்திருக்க வேண்டும்.

 

உடல் எடை குறைவதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள்:

  1. நாள் முழுவதும் உடல் பலவீனமாகவும், சோர்வாகவும் காணப்படும்.
  2. நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படும்.
  3. பெண்களுக்கு மாதவிடாய் முறையிலான சிக்கல்கள் உண்டாகும்.
  4. எலும்புகள் மற்றும் தசைகள் வலுவிழந்து காணப்படும்.
  5. சுவாச குறைபாடு மற்றும் அனேமியா பிரச்சனை ஏற்படும்.


உடல் எடை குறைவதற்கான முக்கிய காரணங்கள்:

பிட்னெஸ் (Fitness) தவறுகள்:

சிலர் எடையைக் குறைக்க அதிகமாக உடற்பயிற்சி செய்து கொள்கின்றனர், ஆனால் அதற்கேற்ப போதுமான கலோரியுள்ள உணவை உட்கொள்ளவில்லை என்றால் உடல் சோர்ந்து எடை குறைந்து விடும். திடீரென அதிக நேரம் ஜிம்மில் செலவிடுவது, எடை தூக்கும் பயிற்சிகளை தவிர்த்து மட்டும் கார்டியோ பயிற்சியில் ஈடுபடுவது, தேவையற்ற ஃபாஸ்ட் அல்லது கிராஷ் டையட்டுகள் பின்பற்றுவது போன்றவை உடலின் சக்தியை குறைத்து, தசை எடையை இழக்க செய்யும்




இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பறித்துக்கொண்டு, நீண்டகாலத்தில் பலவீனத்தையும் நோய்களின் எதிர்ப்பு சக்திக் குறைவையும் ஏற்படுத்தும். எனவே, பயிற்சி மற்றும் உணவு இடையே சமநிலையை பேணுவது அவசியமாகுகிறது.


போஷணை குறைபாடு(Malnutrition):

 போஷணை குறைபாடு உடல் தேவைக்கு ஏற்ப தேவையான ஊட்டச்சத்துக்கள் (புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள்) குறைவாக உட்கொள்வதாலோ அல்லது சரியாக சீராக்கப்படாததாலோ ஏற்படும் நிலையாகும். இது குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை  மற்றும் நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதிகமாக காணப்படுகிறது.




போஷணை குறைபாடு உடலின் வளர்ச்சியை தடுக்கும், நோயெதிர்ப்பு சக்தியை குறைக்கும், பலவீனத்தை உண்டாக்கும், மற்றும் மூளையின் செயல்பாடுகள் குறையக்கூடும். பொதுவாக, இது குறைந்த உணவுக்கூரை, வறுமை, உணவியல் அறிவின்மை, மற்றும் சீரற்ற உணவுப் பழக்க வழக்கங்களால் ஏற்படுகிறது. போஷணை குறைபாட்டை தவிர்க்க, சத்துள்ள மற்றும் சமநிலையான உணவுகளை உட்கொள்ளுதல்,அவசியமாகிறது.


எடை குறைவுக்கு காரணம் மெட்டபாலிசம் (Metabolism) :

 உடலின் மெட்டபாலிசம் வேகமாக இயங்கும்போது, நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் உள்ள கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்துகள் மிக விரைவாக எரியக்கூடிய சக்தியாக மாற்றப்பட்டு விடுகின்றன. இதன் காரணமாக, உடலில் அதிக கலோரி சேமிக்கப்படாமல் போகும், அதனால் எடை அதிகரிக்காமல் இருந்துமெலிந்த தோற்றத்தில் காணப்படலாம். இது இயற்கையான உடல் செயல்பாடாக இருக்கலாம் அல்லது மரபணு காரணமாக இருக்கக்கூடும்




சிலர் தங்கள் உணவில் போதிய கலோரிகளை எடுத்தாலும், அவை உடலில் சேமிக்கப்படாமல் உடனே எரிந்து விடுவதால் எடை கூட முடியாமல் போகிறது. இதனால் அவர்கள் ஒல்லியாகவே காணப்படுகிறார்கள். மெட்டபாலிசம் வேகமாக இயங்குபவர்களுக்கு  அதிகமான அளவில் கலோரி மற்றும் புரதம் கொண்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது நன்மை தரும்

 

மரபணு (Genetics) பாதிப்பு:

மரபணு ஒருவரின் உடல் கட்டமைப்பில் முக்கிய பங்காற்றும் ஒரு காரணமாகும். சிலர் பிறவியிலேயே மெலிந்த உடற்கட்டுடன் பிறக்கிறார்கள், இது அவர்களின் மரபணுவில் ஏற்படுகின்ற இயற்கையான அமைப்பாகும். இது எக்டோமார்ப்(ectomorph) எனப்படும் உடல் வகையைச் சேர்ந்தது. இத்தகைய நபர்களுக்கு உடலில் கொழுப்புகள் சேர முடியாமல் போகும். எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காமல், மெலிதாகவே இருப்பார்கள்.



இதற்கான காரணம், அவர்களின் உடலில் கலோரி சேமிப்பு திறன் குறைவாக இருப்பது. இவர்கள் அதிக கலோரியுடனும், புரதச்சத்துக்களுடனும் கூடிய உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும். மரபணுவால் ஏற்பட்ட மெலிவை மாற்ற முடியாது என்றாலும், சரியான உணவுமுறையை பின்பற்றினால் கண்டிப்பாக உடல் எடையை அதிகரிக்க முடியும்.

 

மனநிலை பாதிப்பு(Mental disorder):

மனஅழுத்தம் (Stress), கவலை (Anxiety), மனச்சோர்வு (Depression) போன்ற உளவியல் நிலைகள் உணவுக்குறையை குறைக்கின்றன. மனஅழுத்தம் அதிகரிக்கும்போது, சிலர் உணவுக்கு விருப்பம் இழந்து விடுகிறார்கள் அல்லது உணவை தவிர்க்கத் தொடங்குகின்றனர். மனச்சோர்வால் தூக்கமின்மை, சோர்வு, சுயநம்பிக்கையின்மை ஆகியவை உருவாகி, நாளடைவில் உடல் எடையும் குறைய ஆரம்பிக்கும். சிலர் மனஅழுத்தத்தை கட்டுப்படுத்த தவறான வழிகளில் (புகை, மதுபானம், உணவைக் கைவிடுதல்) கையாளுகிறார்கள், இது போஷணைக் குறைபாடுக்கு வழிவகுக்கிறது. எனவே, மனநிலை சீராக இல்லாதபோது உணவுப் பழக்கங்கள் பாதிக்கப்படுவதால் உடல் எடையும் குறைந்து விடுகிறது. இதற்கு மனநல ஆலோசனை மற்றும் உணவு சீரமைப்பு செய்வது மிக அவசியம்.


 


ஆரோக்கியமான முறையில் உடல் பருமனை அதிகரிப்பது மிகவும் சுலபமான ஒன்று. ஆனால் அதற்கு சிறிது நாட்கள் கடினமாக உழைக்க வேண்டும். அப்போதுதான்  நல்ல பலன் கிடைக்கும். உங்களுக்காக அருமையான ஸ்மூத்தி(Smoothie) ரெசிபி சொல்லப் போகிறேன். இதை மட்டும் காலையில் வெறும் வயிற்றில் தயார் செய்து குடித்தால் போதும். ஒரு மாதத்திலே நீங்கள் நினைத்து பார்க்காததை விட உடல் எடை அதிகரித்துக் காணப்படும்.




 தேவையானப் பொருட்கள்:

  •  பப்பாளிப் பழம் -பாதி
  •  வாழைப்பழம் - 1
  • சிவப்பு கொய்யாப் பழம் - 1
  •  பாதாம், முந்திரி, வேர்க்கடலை - தேவையான அளவு
  •  காய்ச்ச பால் - 1 கப்(Cup) (உங்கள் விருப்பம்)

பப்பாளிப்பழம், வாழைப்பழம், கொய்யாப்பழம் ஆகிய மூன்றையும் சிறிது சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். வெட்டி வைத்த பழத்தை மிக்சி ஜாரில்() போட்டு  அதில் பாதாம், முந்திரி, வேர்க்கடலை தேவையான அளவு  போட்டு நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். பின் அதில் 1 கப் காய்ச்ச பால் சேர்த்து அனைத்தும் ஒன்றோடு ஒன்று சேருமாறு மென்மையாக அரைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான ஸ்மூத்தி(Smoothie)தயார்.

 


இந்த ஸ்மூத்தியை காலையில் விழித்ததும் பருகிப் பாருங்கள் உங்கள் உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். பருகிய ஒரு மாதத்திலே உடல் ஆரோக்கியமாவது மட்டுமில்லாமல் உடல் மொழுமொழுவென்று மாறியிருப்பதை உணர்வீர்கள். 

Post a Comment

0 Comments