பழங்களின் மகா ராஜா - மாம்பழம்
உலகின் மிகவும் இனிமையான, சுவையான ஊட்டச்சத்து நிறைந்த பழங்களில் மாம்பழமும் ஒன்றாகும். இது வெப்பமண்டல நாடுகளில் பரவலாக விளைகிறது. மேலும் இது இந்திய மக்களின் பாரம்பரிய உணவுப் பட்டியலில் மாம்பழமும் ஒன்றாகும்.மாம்பழத்தில் வைட்டமின் ஏ, சி, இ, பி6 மற்றும் நார்ச்சத்து (dietary fiber) நிறைவாகக் காணப்படுவதால் உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக இருக்கிறது.இவை உடலுக்கு தேவைப்படும் தாகநீரையும், சக்தியையும் தருகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இப்பழம், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், மனநலத்துக்கும் துணைபுரிகின்றது.
மாம்பழத்தின் வகைகள்:
மாம்பழம் பல்வேறு வகைகளில் கிடைக்கின்றது. இந்தியாவில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. அதில் சிறந்த பழங்கள் பின்வருமாறு:
- அல்போன்சோ (Alphonso)
- பங்கனப்பள்ளி (Banganapalli)
- நீலம் (Neelum)
- மல்லிகா (Mallika)
- லங்க்ரா (Langra)
- சிந்தூரி (Chausa/Sindhuri)
- தசரி (Dasheri)
- கேசர் (Kesar)
- இமாம் பாஷா (Imam Pasand)
- தோடாப்புரி (Totapuri)
அல்பொன்சோ ஏற்றுமதிக்கு மிக உயர்ந்த மதிப்பில் விற்கப்படும் மாம்பழம்.
பங்கனப்பள்ளி GI Tag பெற்ற பிரபல மாம்பழ வகையாகும்.
தசேரி, லங்க்ரா ஆகியவை நார்ச்சத்து அதிகமாகவும், வாசனை மிக்கவையாகவும் விளங்குகின்றன.
தமிழ்நாட்டில் பெரும்பாலும் பங்கனப்பள்ளி, நீலம், தோடாப்புரி, இமாம் பாஷா ஆகியவை பரவலாக காணப்படும்.
இயற்கையான குளிரூட்டி:
தோல் மற்றும் கண்களுக்கு பாதுகாப்பு:
மாம்பழம் தோல் மற்றும் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த பழமாகும். இதில் மிகுந்த அளவில் விட்டமின் A மற்றும் பீட்டா-கரோட்டின் ஆகியவை உள்ளதால், கண்களின் பார்வைத் திறனை மேம்படுத்தும் தன்மை கொண்டது. இது கண்களுக்கு தேவைப்படும் ரெட்டினா மற்றும் கொர்னியாவை பாதுகாக்கும் சக்தியை தருகிறது. மாம்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள், குறிப்பாக விட்டமின் சி, தோலை மிருதுவாகவும் பிரகாசமாகவும் வைத்திருக்க உதவுகின்றன.
இது கொழுப்பு சுரப்பிகளை சீராக இயக்கி, தோலின் ஈரப்பதத்தை நிலை நிறுத்தும். மேலும், இது தோலில் ஏற்படும் வயதுச் சாய்வு, கரும்புள்ளிகள் மற்றும் சுருக்குகளை தடுக்கும். சூரியக்கதிர்களின் தீமைகளை எதிர்க்கும் இயற்கையான பாதுகாப்பாகவும் மாம்பழம் செயல்படுகிறது. இதனை சாப்பிடுவதும், முகமூடியாக பயன்படுத்துவதும் தோலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. எனவே, மாம்பழம் தோல் மற்றும் கண்களின் பாதுகாப்பிற்கும் பராமரிப்பிற்கும் சிறந்த இயற்கை உதவியாளர் என்று கூறப்படுகிறது.
உற்சாகம் மற்றும் மன அமைதித் தரும்:
மனம் உற்சாகமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க மாம்பழம் மிகுந்த உதவியாக இருக்கும். மாம்பழத்தில் விட்டமின் பி6 (Vitamin B6) மற்றும் ட்ரிப்டோபான் (Tryptophan) போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளன. இவை மூளையில் செரட்டோனின் எனும் ஹார்மோனின் உற்பத்தியை தூண்டி, மனதை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகின்றன.
மேலும், இதிலுள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சுறுசுறுப்பான நரம்பியல் செயல்களை ஊக்குவித்து மன அழுத்தத்தைக் குறைக்கின்றன. மாம்பழத்தில் உள்ள இனிப்பான இயற்கை சர்க்கரை உடலுக்கு உடனடி சக்தியை வழங்குவதால், தூக்கமின்மை, சோர்வு போன்றவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. நறுமணமும் சுவையும் மனத்தில் நேர்மறை உணர்வை ஏற்படுத்துகிறது. எனவே, மாம்பழம் மன உற்சாகத்திற்கும் உணர்வுப் பூரணத்திற்கும் சிறந்த இயற்கை தோழனாக உள்ளது.
மாம்பழத்தை, ஜூஸ், மில்க்ஷேக், ஸ்மூத்தி, லஸ்ஸி, ஐஸ்கிரீம், பிக்கிள், பச்சடி மற்றும் சட்னி போன்றவையாக பரிமாறலாம். இப்பொது மாம்பழத்தை பயன்படுத்தி சுவையான மில்க்ஷேக் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- மாம்பழம் - 1
- பேரிச்சம்பழம் - 4
- துருவிய தேங்காய் 1/2 மூடி (உங்கள் விருப்பம்)
- காய்ச்சப் பால்- 1 கிளாஸ்
- பாதாம், முந்திரி - தேவையான அளவு
முதலில், மாம்பழம் மற்றும் பேரிச்சம் பழத்தை மிக்சி ஜாரில் போட்டு மென்மையாக அரைத்துக்கொள்ளுங்கள் .பின் பாதாம், முந்திரியை அரைத்து அதையும் தனியாக வைத்துக்கொள்ளுங்கள். மிக்சி ஜாரில் அரைத்து தயார் செய்த மாம்பழம், பேரீச்சம்பழ கலவையையும், பாதாம், முந்திரி கலவையையும் ஒன்றோடு ஒன்று சேர்த்து மிக்சி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.பின் அதனுடன் ஒரு கிளாஸ் பால் மற்றும் அரை முடி தேங்காய் சேர்த்து மிக்சி ஜாரில் ஒன்றோடு ஒன்று சேருமாறு பால் போல் அரைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான மாம்பழ மில்க்ஷேக் தயார். மிக்சி ஜாரில் இருப்பதை ஒரு கிளாஸில் ஊற்றி பருகுங்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகலாம். உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த பலனை தரும்.
கவனிக்க வேண்டியது:
- சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் மிக குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
- அளவுக்கு மீறினால் அமிர்தமும் நன்றாகும் அந்த கூற்றுப் போல் மாம்பழத்தை அளவோடு சாப்பிடுவது மிக நல்லது.
0 Comments
Comments