Ad Code

இயற்கையின் கொடை பனைமரம்... இயற்கையான அழகை தரும் கருப்பட்டி சாக்லேட்(Homemade Palm Jaggery Chocolate Recipe in Tamil)


தமிழர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையில் மிக முக்கியமான இடத்தைப் பெற்ற மரம் பனைமரம்.  தமிழர்களால் "இயற்கையின் புனித மரம்” என்றும் போற்றப்படுகிறது. பனைமரம் (Borassus flabellifer)  பெரும்பாலும் வறண்ட நிலப்பகுதிகளில் வளரக்கூடிய, மிகவும் சகிப்புத்தன்மை கொண்ட மரமாகும். இது ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென்னிந்தியாவில் பரவலாகக் காணப்படுகிறது. பனைமரத்தின் ஒவ்வொரு பகுதியும் மனித வாழ்க்கையில் பல்வேறு பயன்பாடுகளை வழங்குகிறது. 

பதனீர்:

பதனீர் பனைமரத்தின் கொம்புகளை வெட்டினால் வெளிவரும் சுவை  நிறைந்த இயற்கை திரவம்.  தமிழ் நாட்டின் பாரம்பரிய இயற்கை குளிர்பானமாகும். அதனை சுட வைத்து உறைந்து உருவாகும் கருப்பட்டியில் இரும்புச்சத்து, சத்துக்கள் மற்றும் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. குடல் சீராக்கும், இரத்தம்  சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. வெப்பமான காலங்களில் உடலுக்கு அதிகம் குளிர்ச்சி அளிக்கும் பண்புடையது. 


இதில் கார்போஹைட்ரேட், கால்சியம், மெக்னீசியம், சோடியம் போன்ற முக்கியமான கனிமச் சத்துக்கள் அடங்கியுள்ளன. இதன் இனிமையான சுவை, சக்தியை உடனடியாக அளிக்கும் தன்மை கொண்டது. செரிமானத்தை மேம்படுத்தும், உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தும், பசியை தூண்டும் என்பன இதில் உள்ள நன்மைகள். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பாதுகாப்பாகக் குடிக்கக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பதனீர், வெப்பத்தால் ஏற்படும் தலைவலி, உடல் சோர்வு போன்றவற்றை குறைக்கும். 

பழங்கள் மற்றும் உணவுப் பயன்கள்:




பனைமரத்தின் கனிகள் (பனங்காய்) சுவையானவை மற்றும் அதீத ஊட்டச்சத்துகளும் நிறைந்தவை. பனங்கிழங்கு, நுங்கு,  ஆகியவை பனை மரத்திலிருந்து பெறப்படுகின்றன. நுங்கு (இளநீர் போலவே சத்து மிக்கது) வெப்பத்தைக் குறைக்கும் இயற்கை பானமாகும். பனங்கிழங்கு ஊட்டச்சத்து மிக்கது; இதில் காபோஹைட்ரேட், நார்சத்து மற்றும் வைட்டமின் பி உள்ளன.


மரப் பயன்பாடு:




பனைமரத்தின் மரங்கள் மிகவும் வலிமை வாய்ந்தவை. இது கட்டட வேலைகளில், வேலி அமைப்பதில், பாய்கள் மற்றும் நிழற்குடைகள் தயாரிப்பதில் பயன்படுகிறது. பனைமரத்தின் தண்டு நீண்ட நாட்கள் உறுதி அளிக்கும் தன்மை கொண்டது. பழங்காலத்தில் இது பாலம், வீட்டு தளங்கள் போன்றவை கட்டப் பயன்படுத்தப்பட்டது.


பனை ஓலைகளின் பயன்கள்:



பனை மரத்தின் ஓலைகள் (இலைகள்) பலவித வேலைகளில் பயன்படுகின்றன. இதில் பருத்தாட்கள், பையன்கள், பைகள்கள், மதில் வேலி, கூரை போன்றவை தயாரிக்கப்படுகின்றன. ஓலைச்சுவடி தமிழர்கள் பழங்காலத்தில் எழுதியதற்குப் பயன்படுத்திய முக்கியமான எழுதுதல் பொருள் ஆகும் இந்த ஓலைசுவடிக்கு  பனை ஓலையை  தான் பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சாக்லேட் சாப்பிடுவதை தவிர்:




சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாக்லேட் விரும்பி சாப்பிடுவார்கள்.  சாக்லேட்டில் அதிக அளவில் சர்க்கரை மற்றும் கொழுப்பு (fat) உள்ளதால், உடல் பருமனுக்கும், நீரிழிவு நோயுக்கும் காரணமாகலாம். தொடர்ந்து அதிகளவு சாக்லேட் எடுத்துக்கொண்டால், பற்களில் பாக்டீரியா உருவாகி பல் அழுகும் பிரச்சனை உருவாகும். சிலர் சாக்லேட்டில் உள்ள கெமிக்கல்களுக்கு அலர்ஜியாக இருந்து, தோல் அரிப்பு, பிம்பிகள், முகப்பருக்கள் போன்ற தோல் பிரச்சனைகளுக்கு உள்ளாகலாம். குறிப்பாக டார்க் சாக்லேட்டில் உள்ள காபைன் அதிகமாக இருப்பது, தூக்கக் கோளாறு மற்றும் மன அழுத்தத்தை தூண்டக்கூடும். சில நேரங்களில், சாக்லேட் அடிக்கடி சாப்பிடுவது, உணவுப் பழக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி, குழந்தைகள் சத்துள்ள உணவுகளை தவிர்க்கும் பழக்கத்தை வளர்த்துவிடும்.  அதிக கொழுப்பு காரணமாக கல்லீரல், சிறுநீரகங்களில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 


நோய்எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய சுவையான சாக்லேட் வீட்டிலே தயாரிக்கும் முறை(100%):



தமிழர்களின் பாரம்பரிய தொழிலான பணத்தொழிலில் கிடைக்கும் இயற்கையான கருப்பட்டியை பயன்படுத்தி  வீட்டிலிருந்தே சுலபமாக  சாக்லேட் தயாரிக்கலாம். எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். 

கருப்பட்டி (Palm Jaggery):

பழங்காலத்திலிருந்தே தமிழகத்தில் கருப்பட்டி பல நோய்களுக்கு மருந்தாகவும், ஒரு உணவுப் பொருளாகவும் பயன்பட்டு வருகிறது. அதில் உள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் இன்று பலரும் மறுபடியும் உணரத் தொடங்கியுள்ளனர். 


 கருப்பட்டியில்  இரும்புச்சத்து (Iron) அதிகமுள்ளதால், இரத்த சோகை (Anemia) பிரச்சனையில் மிகவும் பயனுள்ளதாகும். கருப்பட்டியை அடிக்கடி உணவில் சேர்த்தால் ஹீமோகுளோபின் அளவு உயரும். மேலும், இதில் நார்ச்சத்து (Dietary fiber) செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது. இது குடலுழற்சியை சீராக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.



கருப்பட்டியில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், ஃபாஸ்பரஸ், சோடியம் போன்ற கனிமச் சத்துக்கள் உள்ளதால், எலும்புத் தசை வலிமை, நரம்பு இயக்கம் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது. இது ஆண்டி-இன்பிலம்மட்ரி(anti-inflammatory) உணவாகவும் செயல்படுகிறது. எனவே, சளி, இருமல், காய்ச்சல் போன்ற நிலைகளை நிவர்த்தி செய்ய பயன்படுகிறது. பச்சை சுக்கு, இஞ்சி, மிளகு, திப்பிலி ஆகியவைகளுடன் சேர்த்து கருப்பட்டியால் தயாரிக்கப்படும் கஷாயம் சிறந்த சளி நிவாரண மருந்தாகக் கருதப்படுகிறது.



பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசை வலியை குறைக்கும் தன்மை கருப்பட்டிக்கு உண்டு.  மாதவிடாய் சுழற்சியை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது. கருப்பட்டியை தினமும் சிறு அளவில் எடுத்துக்கொண்டால், தொல்லைகளின்றி மாதவிடாய் நிகழும். மேலும் கருப்பட்டி தொல்லை இல்லாத இனிப்பு என்பதால் குழந்தைகளுக்கும் பயன்படுத்த ஏற்றது.


கருப்பட்டியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை சருமத்திற்கு பலனளிக்கின்றன. இது சருமம் பளிச்சென்று காண உதவுகிறது. முகப்பருக்கள், கருப்பு தழும்புகள் போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் இயற்கை மருந்தாக கருப்பட்டியைப் இருக்கிறது. வெள்ளைச் சர்க்கரையின் தீமையை தவிர்த்து, சத்து நிறைந்த  சிறந்த மாற்றுப்பொருளாக கருப்பட்டி பரிசீலிக்கப்படுகிறது. இது பாரம்பரிய தமிழ் மருத்துவத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது.




தேவையான பொருட்கள்:

கருப்பட்டி(Palm Jaggery) - 1/4 கப் 

சாக்லேட் பவுடர்(COCO Powder)-1/2 கப் 

வெண்ணெய்(Butter) -1/4 கப் 

சுக்கு பவுடர்(Dried Ginger Powder) - 1/2 டீஸ்பூன் 

பாதாம்(Almonds), முந்திரி(Cashews), பிஸ்தா(Pistachio), வால்நட்(Walnut)-தேவையான அளவு (உங்கள் விருப்பம்), நட்ஸ் சேர்த்தால் சுவை அதிகமாகும் மற்றும் ஆரோக்கியத்திற்கும் நல்லது. 

கருப்பட்டி, சாக்லேட் பவுடர் இரண்டையும் மிக்சி ஜாரில்(Mixer Jar) போட்டு  கொள்ளுங்கள். பின் பாத்திரத்தில்(Stainless Steel) வெண்ணெயை போட்டு உருக்கி கொள்ளுங்கள். உருக்கிய வெண்ணையை கருப்பட்டி மற்றும் சாக்லேட் உடன்  சேர்த்து கொள்ளுங்கள். மேலும், அதனுடன்  1/2  டீஸ்பூன் சுக்கு பவுடர் சேர்த்து  மிக்சி ஜார்(Mixer Jar)  பயன்படுத்தி  அனைத்தும் ஒரே பதத்திற்க்கு  வருமாறு தயார் செய்து கொள்ளுங்கள்.  மிக்சி ஜாரில் இருப்பதை சாக்லேட் வடிவ பாத்திரத்தில்(Bakeware Moulds & Tins) எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன், பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட் தேவையான அளவு சேர்த்துக் கொண்டு குளிர்சாதனப்பெட்டில் இரண்டு மணிநேரம் வையுங்கள்.அவ்வளவுதான் சத்தான சுவையான சாக்லேட் ரெடி...


கவனிக்க வேண்டியவை:

  • சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைக்கிணங்க மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • ராசாயன கலப்படமில்லாத தூய்மையான கருப்பட்டியை தேர்ந்தெடுக்க வேண்டும்.










 

Post a Comment

0 Comments