Ad Code

Hair Care Tips in Tamil:நரைமுடியால் அவதிவுறுகிறீர்களா??? தினமும் இந்த ஒரு க்ரீன் ஜூஸ் மட்டும் குடித்தால் போதும். முடி கரு கருவென்று மாறிவிடும்.

வயது கூடுவதால் ஏற்படும்  இயற்கையான செயலாக நரைமுடி இருந்தாலும், இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதிலேயே நரைமுடி தோன்றுவது  பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. இன்றைய காலக்கட்டத்தில் வேகமான வாழ்க்கைமுறை, மன அழுத்தம், தூக்கமின்மை, தவறான உணவுமுறை மற்றும் மரபணு காரணங்களால் இளம் வயதிலேயே நரைமுடி உருவாகும் பிரச்சனை போன்றவை அதிகரித்து வருகிறது. 



இது பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரையும் சமூக ரீதியாகவும், மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்த கூடும். பெரும்பாலானவர்கள் இந்நிலைமை காரணமாக தங்களுடைய தன்னம்பிக்கையை இழந்து, வெளியே செல்லவே தயங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். குறிப்பாக பெண்களுக்கு இது ஒரு அழகு குறைபாடாகவே பார்க்கப்படுகிறது. 

பெருபாலானோர்க்கு நரை முடி சத்து குறைபாட்டினால் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனை எளிதில் சரிசெய்து விடலாம்.  வாரத்திற்கு மூன்று முறை  க்ரீன் ஜூஸ் பருகினால் போதும். நரை முடி பஞ்சாய் பறந்து போய்விடும்.  கீழே க்ரீன் ஜூஸ் எப்படி தயாரிப்பது என்று விரிவாகப் பார்க்கலாம்.




தேவையானப் பொருட்கள்:

நெல்லிக்காய் - 2
வெள்ளரிக்காய் - 6 பிஸ் 
இஞ்சி - ஒரு துண்டு 
மிளகு - 3
கொத்தமல்லி, புதினா - தேவையான அளவு 

எலுமிச்சைக்காய்- பாதி 

முதலில், நெல்லிக்காய்,வெள்ளரிக்காய்,கொத்தமல்லி, புதினா  மற்றும் இஞ்சியை  சிறியது சிறிதாக  வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். வெட்டி வைய்த்ததை ஒரு மிஸ்சி ஜாரில் போட்டு மென்மையாக  அரையுங்கள். அரைத்துவைத்ததுடன் பாதி எலுமிச்சைக்காய் மற்றும் மிளகு சேருங்கள். க்ரீன் ஜூஸ் தயார். வாரத்திற்கு மூன்று முறை இந்த க்ரீன் ஜூஸ் குடியுங்கள். ஒரு மாதத்தில் தலைமுடியில் நல்ல மாற்றம் வந்திருப்பதை உணர்வீர்கள்.


தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும், இளநரை மறையவும் உதவும் மேலும் சிலக் குறிப்புகள்:




நெல்லிக்காய் மற்றும் கடுகு எண்ணெய் பயன்படுத்துதல்:


நெல்லிக்காயை சிறு துண்டுகளாக்கி வெயிலில் உலர்த்தி சுத்தமான தேங்காய் எண்ணையில் கலந்து கொதிக்கவிட்டு இந்த எண்ணெயை தலைக்கு தடவி வந்தால் தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்கும். 


மருதாணி இலைகளை காம்பு இல்லாமல் சுத்தம் செய்து ஈரமில்லாமல் கடுகு எண்ணெயில் லேசாக சூடாக்கி இந்த எண்ணையை தொடர்ந்து தலைமுடிக்கு பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கொடுக்கும்.


தலைமுடி மாஸ்க்:

நெல்லிக்காயை சூரிய ஒளியில் நன்கு  காயவைத்து பின் அதனை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் பாதி எலுமிச்சைப் பழம் மற்றும் தயிர் சிறிது பால் சேர்த்து அனைத்தும் ஒன்றோடு ஒன்று சேருமாறு வைத்துக்கொள்ளுங்கள்.  தலைமுடி மாஸ்க் தயார். இதனை  குளிக்க செல்வதற்கு முன் பயன்படுத்துங்கள். நல்ல பலன் கொடுக்கும்.


நரைமுடி ஒருவரின் அழகையோ மதிப்பையோ குறைக்கும் ஒன்றல்ல. நரையுடன் வாழ்வதற்கும் அதைக் கொண்டே அழகாகத் தோன்றுவதற்கும் நம்மிடம் தன்னம்பிக்கையும், நேர்மறையான மனப்பாங்கும் இருக்க வேண்டும். நரைமுடி வந்துவிட்டதாக மனம் உடையாமல், அதை தற்கொண்டு அலங்கரிக்கவும், இயற்கையான பராமரிப்புகளை கடைபிடிக்கவும் முனைவோம். 

பெண்களும் ஆண்களும் தங்களின் தனித்துவத்தை, தங்கள் தோற்றத்தை அன்போடு ஏற்கும் போது, நரைமுடி சின்னமானது கூட ஒரு பெருமை குறியாக மாறும். வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் நம்மை நாமே நம்புவதே உண்மையான அழகு.




Post a Comment

0 Comments