பழங்காலத்தில் எல்லாம் குடும்பத்தில் வறுமை காரணத்தால் அதிக குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்தாமல் வீட்டின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சிறுவயதில் இருந்தே உழைப்பில் மட்டுமே கவனம் செலுத்தினர். ஏனென்றால், அப்போது இருந்த காலக்கட்டத்தில் வறுமையினால் வீட்டில் சாப்பிடக் கூட பணம் இருக்காது. அதனால் பெற்றோர்கள் குழந்தைகளை சிறுவயதிலே வேலைக்கு அனுப்பி விடுவார்கள். இப்பொது இருக்கும் காலக்கட்டத்தில் தொழிநுட்பமும் அதிகரித்து அனைவரும் கல்வியை நோக்கி செல்ல ஆரம்பித்து விட்டனர். கல்வி முக்கியம் தான் ஆனால் கல்வியில் சிறந்து விளங்க கண்டிப்பாக மூளையின் செயல்பாடு மிகவும் அவசியம். கல்வியில் மட்டும்மல்ல நம் அன்றாட வாழ்க்கையிலும் மூளையின் செயல்பாடு மிகவும் அவசியமாகுகிறது.
மனிதனின் மூளை வளர்ச்சியை தடுப்பவை:
- உடலில் தேவையான அளவு ஊட்டச்சத்து இல்லாதது
- நெடுநேரத் தூக்கம் இல்லாதது
- மன அழுத்தத்திற்கு தள்ளப்படுவது
- தொலைக்காட்சி, மடிக்கணினி மற்றும் தொலைப்பேசி அதிகம் பயன்படுத்துவது
- உடலுக்கு தேவையான பயிற்சி செய்யாமல் இருப்பது(ஓடுதல், விளையாட்டு, வெளியில் ஆடுதல்)
- தூய்மையற்ற சுற்றுப்புறம் & தொற்று நோய்கள்
- புகை மற்றும் ஆல்கஹால் சூழலுக்கு அடிமையாவது
குழந்தைகளின் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க நிறைய செயல்பாடுகள் உள்ளனர். அதில் முக்கியமான ஒரு ரெசிபியை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். அதுதான் வாழைப்பழ மில்க்ஷேக். வாழைப்பழ மில்க்ஷேக் எப்படி தயாரிக்கலாம் என்று கீழே பார்க்கலாம். தவறாம பாருங்கள். உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பால் - 1 கிளாஸ்(Glass)
வாழைப்பழம் - 1
பேரிச்சம்பழம் - 2
முந்திரி, பாதாம், வால்நட்ஸ் , வேர்க்கடலை - தேவையான அளவு(உங்கள் விருப்பம்)
தேன் - 1 டேபிள்ஸ்பூன்
ஒரு கிளாஸ் பாலை எடுத்து காய்த்து வைத்துக்கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரில் வாழைப்பழம், பேரிச்சம்பழம், முந்திரி, பாதாம், வால்நட்ஸ் , வேர்க்கடலை ஆகிய அனைத்தையும் சேர்த்து மென்மையாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். பின் அரைத்து வைத்ததுடன், காய்ச்ச பாலை சேர்த்து கொள்ளுங்கள். இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான வாழைப்பழ மில்க்ஷேக் தயார். இந்த மில்க்ஷேக்கை சிறுவர்கள் மட்டும் இல்லாமல் யாருவேண்டும் என்றாலும் பருகலாம். உடலுக்கு மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். காலை வேளையில் வெறும் வயிற்றில் பருகினால் நல்ல பலன் கொடுக்கும்.
0 Comments
Comments