Ad Code

டீன் ஏஜ் முதல் முதிர்வு வரை சருமத்தை பராமரிக்கும் எளிய குறிப்பு முறை: Best Face Care and Body Care Tips in Tamil

 சருமம் நம் வாழ்நாள் முழுவதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. டீன் ஏஜில் ஒரு மாதிரியும், அதைக் கடந்ததும் வேறு மாதிரியும் நடுத்தர வயதில் வேறு மாதிரியும் இருக்கும். அந்தந்த வயதிற்கேற்ப சருமத்தை முறையாகப் பராமரிக்க வேண்டியது அவசியம். இளமையாக இருக்கும் போதே உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள். இல்லையென்றால் பாதிவயது கடந்த போது அதனுடைய சுயரூபத்தை  காட்ட ஆரம்பிக்கும். அதனால் வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

சருமத்தை அழகாவும்,  உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வதில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் முச்சுப்பயிற்சி முக்கிய பங்கு வகுக்கிறது. இப்பயிற்சியை தினமும் காலையில் பழக்கமாக்கி கொள்ளுங்கள். இப்பழக்கத்தை தினமும் கடைபிடிக்கும் போது உங்களுக்குள் நிறைய மாற்றங்கள் வருவதை உணர்வீர்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளை பச்சையாகவோ அல்லது சலட் செய்தோ சாப்பிடுவதை  தினமும் வழக்கத்தில் கொள்வது நமது உடலுக்கு மிகவும் நல்லது. உடலை பாதுகாப்பாக வைத்திருந்தால் தான் சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள முடியும். அதை முதலில் நினைவில் கொள்ளுங்கள்.

டீன் ஏஜில் சருமத்தை பாதுகாக்கும் வழிமுறை:

காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளும் முகத்தை சுத்தமாகக் கழுவவும். பகல் வேளைகளில் சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும். பருக்களோ, கரும்புள்ளிகளோ, வேறு பிரச்சனைகளே இல்லாத சுத்தமான சருமமாக இருந்தாலும் முறையாக கிளென்சர், மாயிச்சரைசர், டோனர் ஆகியவற்றை உபயோகிப்பது நல்லது. பருக்கள் இருந்தால் ஆரம்பத்திலேயே சரும மருத்துவரைக் கலந்தாலோசித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். உணவுக் கட்டுப்பாடு அவசியம், எண்ணெய்ப் பதார்த்தங்களை ஒதுக்கிவிட்டு, பச்சை காய்கறிகளையும், பழங்களையும் நிறைய சாப்பிடவும்.

இருபது வயதிற்கு மேல் சருமத்தை பாதுகாக்கும் வழிமுறை:


மெல்லிய கோடுகளோ, சுருக்கங்களோ தென்படுகின்றனவா எனப் பாருங்கள். வழக்கமான சருமப் பராமரிப்பைத் தொடரவும். தூங்கச் செல்வதற்கு முன் முகத்திலுள்ள மேக்கப்பை நீக்கி சருமம் சுவாசிக்க வழி செய்யவும். அழகு நிலையத்திற்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. இணையதளத்தில் முகத்தை இயற்கையாக அழகுபடுத்தும் குறிப்பு முறைகளை தேடி பயன்படுத்தவும். செயற்கை அழகு முறை சீக்கிரமாக பலன் தரும். ஆனால் காலம் செல்ல செல்ல முகம் மோசமான நிலையில் காணப்படும். உடல் உபாதைகளால் கஷ்டப்படுவீர்கள். ஆனால் இயற்கை குறிப்பு முறை அப்படி அல்ல. நிறைய காலம் எடுத்துக்கொள்ளும். ஆனால் நல்ல பலனைக் கொடுக்கும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை முகத்தை ஸ்கரப்பர் உபயோகிக்கவும். 


முப்பது வயதிற்கு மேல் சருமத்தை பாதுகாக்கும் வழிமுறை:


இந்த வயதில் முன்பை விட அதிகப் பராமரிப்பு சருமத்திற்கு முக்கியம். முக்கியமாக வெயிலின் பாதிப்பு சருமத்தைத் தாக்காமல் காக்க வேண்டும். அதிக வெப்பம் சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தி, முதுமையை உண்டாக்கும். வெளியில் இருந்து வந்ததும் குளித்து விடுவது நல்லது. உடம்பில்  மற்றும் முகத்தில் தங்கியிருக்கும் மாசுகளை அகற்றிவிடும். தினமும் காலை மற்றும் இரவு(தாமதமாக குளிக்க கூடாது. சளி தொற்றிக்கொள்ளும்) முன்பாக குளிக்க வேண்டும். இப்படி குளித்தால் புத்துணர்ச்சி கிடைக்கும். செய்ய நினைக்கும் வேலையை சீக்கிரமாக முடித்துவிடுவீர்கள்.

மாதம் ஒருமுறை ஃபேஷியல் செய்து கொள்ளவும். இது சருமம் தொய்வடையாமல் காத்து, சருமத்தின் ஆழத்தில் படிந்த அழுக்குகளை அழுக்குகளை அகற்றும். தினசரி இரவில் நைட் கிரீம் உபயோகிக்கவும். சருமத்தை வறண்டு போகவிட வேண்டாம். எப்போதும் மாயிச்சரைசர் தடவியபடி இருக்கவும். 

ஐம்பது வயதிற்கு மேல் சருமத்தை பாதுகாக்கும் வழிமுறை:

 


சருமம் அதிக மாறுதல்களை அடைவது இந்தப் பருவத்தில் தான். எண்ணெய்ப் பசையான சருமம் வறண்டுப் போகக் கூடும். மெனோபாஸ் காலமும் நெருங்குவதால் சருமப் பிரச்சனைகள் நிறைய வரும். அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். முறையாக கவனிக்காவிட்டால் சுருக்கங்களும், கோடுகளும் முக அழகையே கெடுத்து விடும். பாலாடையால் மசாஜ் செய்வதும், தினசரி, இரவில் கிரீம் தடவுவதும் முதுமைத் தோற்றத்தைச் சற்றே தள்ளிப் போட உதவும். 






Post a Comment

0 Comments