Ad Code

தினமும் சீத்தாப்பழத்தை சாப்பிட்டால் மேனி பளபளக்குமா? சீத்தாப்பழத்தில் உள்ள சத்துக்கள் மற்றும் பலன்கள்: Best Full Body Healthy Fruit Custard apple. Explain Benefits in Tamil

 சீத்தாப்பழம்பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் அருச்சுவையும் கொண்டது. இப்பழம் ரத்த உற்பத்தியை அதிகரிக்க உதவியாக இருக்கிறது.சீத்தாப்பழதின் தோல் விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால் அதிக இனிப்பு சுவையைத் தருகிறது. ஆயிர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுகிறது. 

சீத்தாப்பழத்தில் உள்ள சத்துக்கள்:

                                                                  சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. இது தவிர மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை போன்ற சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியுள்ளன. 

  

சீத்தாப்பழமும், சீத்தாப்பழ இலையும், சீத்தாப்பழ விதைகளும்(பலன்கள்):


முகப் பருக்கள் குணமடையும்:


                                                                 சீத்தாப்பழத்தோடு உப்பு கலந்து பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும். 

மேனி பளப்பளப்பாகும்:

                                     விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.


சீத்தாப்பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.


சிறிதளவு வெந்தயம், பாசிப்பயிறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப்பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.


மேனியை பளபளப்பு ஆக்குவதில் சீத்தாப்பழ விதை பொடி முக்கிய பங்காற்றுகிறது. விதையின் பொடியில் டீ தயாரிக்கப்பட்ட டீயை அருந்தினால் உடலுக்கு புத்துணர்ச்சிக் கிடைக்கும்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்:

சீத்தாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப போக்கை கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு சீத்தாப்பழ இலை அருமருந்து. சீத்தாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.


 எலும்பு வலுவடையும்:

                                            சீத்தாப்பழத்தில் உடலை பலமாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும்.  சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் வலுப்பெறும். ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும். 



  

Post a Comment

0 Comments