சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்னும் பழமொழியை மனதில் நிறுத்தி யோசித்தால், நாம் ஏன் இளமையுடன் வாழ வேண்டும் என்பதை உணர முடியும். காலையில் கண்விழிக்கும் போதே, கால்வலி, முதுகுவலி, தொண்டையில் எரிச்சல் போன்ற சிறிய உபாதைகளுடன் படுக்கையை விட்டு எழுந்தால் நாம் அன்றாடம் நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளையும், வேலைகளையும் ஒழுங்காக செய்து முடிக்க முடியுமா? என்று சிறிது நேரம் சிந்தித்துப் பாருங்கள். இளமையுடன் இருந்தால் தான் நாம் அன்றாடம் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும், ஒழுங்காகவும், காலம் தவறாமலும் செய்ய முடியும். நாம் இளமையுடன் இருக்கவும் வாழவும் சில எளிய பழக்க வழக்கங்களை நடைமுறை படுத்திக் கொண்டால் இளமை நம்மை விட்டு விலகாமல் இருப்பது நிச்சயம்.
இளமைபருவத்தோடு வாழ நம்முள் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டிய எளிய பழக்கவழக்கங்கள்.
- விடியற்காலையில் 5 மணிமுதல் 6 மணிக்குள் படுக்கையை விட்டு ஏழ பழகிக் கொள்வது.
- காலையில் உணவு உட்கொள்வதை கட்டாயமாக்கிக் கொள்வது
- காலை இளம் வெயிலில் அலையாமல் இருப்பது
- நமக்குப் பிடித்த ருசியான உணவை அளவுக்கு அதிகமாக தேவையில்லாமல் உண்டு பின் உடல் பருமனால் அவதிப்படுவது
- பகல் பொழுதில் உறக்கத்தை தவிர்த்து இரவில் உறங்கும் பொழுது இடது கைப் பக்கம் ஒருக்களித்துப்படுத்துக் கொள்வது.
- அழுகிப்போன பழங்களையும், ஊசிப்போன மற்றும் தீய்ந்துப் போன உணவு பதார்த்தங்களை உண்பதை முழுமையாக தவிர்த்து சத்துள்ள காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் பழங்களையும் நம் அன்றாடம் உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்வது
- அசைவ உணவு வகைகளை முழுமையாக தவிர்க்க முடியாவிட்டாலும் படிப்படியாக குறைத்துக்கொள்ள பழக்கபடுத்திக் கொள்வது
- குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் உணவு அருந்தி சுத்தமான குடிநீரைப் பருக பழகிக் கொள்வது
- டீ, காபி போன்றவற்றை அதிகமாக உபயோகிக்காமல் இருப்பது
- இரவில் வெகுநேரம் கடந்து இரவு உணவை உண்ணாதிருத்தல்
- இரவில் சாப்பிட்ட பிறகு குறைந்தது ஒருமணி நேரம் சென்ற பிறகு உறங்கச் செல்வதை பழக்கப்படுத்திக் கொள்வது
- உடலுக்குத் தேவையான அளவு ஓய்வு கொடுக்காமல் உடல் வருந்த வேலை செய்யாமல் இருப்பது.
- வாரம் இருமுறை, குறைந்தது ஒரு முறையாவது வெண்ணெய் முதலியவற்றை உண்ணாமல் தவிர்ப்பது.
- மதுபான வகைகள் மற்றும் புகையிலை பொருட்களை உபயோகிக்காமல் இருப்பது.
- இரவு தூக்கம் குறைந்தபட்சம் ஏழு மணி நேரமாவது இருக்க வேண்டும். தவறினால் ஆறு மணி நேரம் கண்டிப்பாக உறங்கப் பழகிக் கொள்வது.
இந்த நல்ல பழக்கவழக்கங்களை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி விட்டால் உங்களின் வாழ்வில் இளமையும், ஆரோக்கியமும், சந்தோஷமும் நிறைந்து இருக்கும்.
0 Comments
Comments