Ad Code

குழந்தைகள் முதல் முதியவர் வரை இளமையாகவும், சந்தோசமாகவும் வாழ கடைபிடிக்க வேண்டிய நல்ல பழக்கவழக்கங்கள் மற்றும் தவிர்க்கவேண்டிய கெட்டப் பழக்கவழக்கங்கள்(தமிழில்): Good Habits & Bad Habits in Tamil


Good Habits & Bad Habits

பழக்கவழக்கங்கள் என்பது ஒரு மனிதன் தினமும் செய்வதற்கான செயல்கள் ஆகும்.தினமும் பயன்படுத்த வேண்டிய நல்ல பழக்கவழக்கங்கள் மனித உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதுகாக்க மிகவும் அவசியமாக அமைகிறது. நல்ல பழக்கவழக்கங்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் நம் வாழ்க்கை ஒழுக்கமுடனும், நலனுடனும் இருக்க முடியும். 

Good Habits and Bad Habits

குழந்தைகளை  சிறு பருவத்திலே  நல்ல பழக்கவழக்கங்களை  உருவாக்குவது, அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு வலிமையான அடித்தளமாக அமையும். மனிதனின் வாழ்வில் கெட்ட பழக்கவழக்கங்கள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், ஆகவே அவை நல்லதாயிருத்தல் அவசியம்.

கடைப்பிடிக்க வேண்டிய நல்ல பழக்கவழக்கங்கள் (Good Habits): 


Good Habits


  1. காலையில் 5 மணிக்கு எழுந்து விடுங்கள். எழுந்ததும், குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்யவும்.
  2. வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள பழகுங்கள். 
  3. காலை மற்றும் இரவு என்று இரு முறை மேல் குளியல் குளிக்க வேண்டும். 
  4. தினமும் பல் மற்றும் வாயைப்  காலை மற்றும் இரவு என்று இரு  முறை  துலக்கவும்.
  5. தோல் பராமரிக்க இயற்கையான முகக்கவசம், மாய்ஸ்சரைசர் பயன்படுத்தவும்.
  6. முடிக்கு வாரம் 2 முறை எண்ணெய் தடவுங்கள். 
  7. தினசரி 7–8 மணி நேரம் தூக்கம் பெறவும்.
  8. தினமும் 2–3 லிட்டர் தண்ணீர்அவசியம்  குடிக்கவும்.
  9. பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உட்கொள்ளவும்.
  10. நேரத்திற்கு உணவு சாப்பிடுதல் அவசியம். நேரத்திற்கு சாப்பிடவில்லை என்றால் உடல் பருமன் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது,
  11. மன அழுத்தம் குறைக்க தியானம், யோகா, மெதுவான மூச்சு பயிற்சி செய்யவும்.
  12. தினமும் வாசிப்பு, கற்றல், நன்றி கூறும் பழக்கங்கள் நம் எண்ணங்களையும் நேர்மறையாக மாற்றுகின்றன. 
  13. வழக்கமான உடல் பரிசோதனை செய்வது உடல்நலத்துக்கு உதவிகரமாக இருக்கும்.

தவிர்க்க வேண்டிய கெட்ட பழக்கவழக்கங்கள் (Bad Habits):





  1. புகையிலை, சிகரெட், மது போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும்.
  2. அதிக எண்ணெய், உப்பு, சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  3. முக்கியமான உணவுகளான காலை உணவை தவிர்ப்பதை  தவிர்க்க வேண்டும்.
  4. அதிக நேரம் மொபைல், டிவி, லேப்டாப் பயன்படுத்துவது கண் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அதனால் அதிகமாக மொபைல், டிவி, லேப்டாப் பயன்படுத்துவதை தவிருங்கள். 
  5. தூங்கும் நேரத்தை புறக்கணித்தல் அல்லது குறைவாக தூங்குவது ஆரோக்கியத்திற்கு கேடு.
  6. உடல் நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைக்கு செல்லாமல் இயற்கையான முறையில் குணப்படுத்த பாருங்கள். இயற்கையான முறையில் சரியாகவில்லை என்றால் பின் மருத்துவரை சென்று பாருங்கள். தானாக மருந்துகள் சாப்பிடுவது ஆபத்தானது.மருத்துவரின் ஆலோசனை அவசியம்.
  7. தோல் மற்றும் முடிக்கு அதிகமான கெமிக்கல் பொருட்கள் (bleach, hair dye) பயன்படுத்த வேண்டாம்.
  8. உடற்பயிற்சி இல்லாமல் சோர்வாக இருப்பது உடல் பராமரிப்புக்கு கேடு.
  9. தண்ணீர் குடிக்காமல் உடலை வாட்டுவது தோல் உலர்ச்சி, சோர்வு போன்றவற்றை உண்டாக்கும்.
  10. நாள்தோறும் உடல் சுத்தம் இல்லாமல் இருப்பது நோய்களுக்கு வாய்ப்பளிக்கும்.
  11. நல்ல பழக்கவழக்கங்களை வளர்த்துக் கொள்ளுதல், கெட்ட பழக்கவழக்கங்களை முற்றிலுமாக தவிர்த்தல், நீடித்த ஆரோக்கியமும், ஆனந்தமிக்க வாழ்க்கையும் சாத்தியமாகும்.



Post a Comment

0 Comments