Ad Code

அமைதியான மனநிலையை அதிகப்படுத்தும் யோகா(Yoga): Explain Yoga Tips in Tamil

உடற்பயிற்சி என்பது மனித உடலின் நலம் மற்றும் ஆரோக்கியத்திற்காக உடலை இயக்கி செய்கின்ற  ஒழுங்கான செயலாகும். இது உடலின் நலத்தையும், செயல்திறனையும் மேம்படுத்தும் ஒரு அத்தியாவசிய வழிமுறையாகும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் நம் உடல் உறுப்பு மண்டலங்கள் மற்றும் எல்லா உள் உறுப்புகளும் முறையாக இயங்க உதவுகிறது. இதயத்தின் செயல்பாடு மேம்படுகிறது, ரத்த ஓட்டம் சீராகிறது, சுவாச மண்டலம் சக்திவாய்ந்ததாக மாற்றப்படுகிறது. 

தினசரி உடற்பயிற்சி மூலம் நமக்கு தேவையான சக்தி, உற்சாகம், மன உறுதி ஆகியவை அதிகரிக்கின்றன. இது மன அழுத்தம், கவலை, மனச்சோர்வு ஆகியவற்றைக் குறைக்கும் நலன்களையும் வழங்குகிறது. மேலும், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து அதிகம், மூட்டு வலி போன்ற நீண்டகால நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. யோகா என்பது உடலையும், மனதையும் சமநிலையுடன் பராமரிக்கும் முறையாகும். இது ஒருவரின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும்.

யோகா செய்யும் சிறந்த நேரம்:

  • காலை(வெறும் வயிற்றில்)
  • மாலை 

உடற்பயிற்சி பல வகைகளில் செய்யப்படுகிறது: நடைப்பயிற்சி, ஓட்டப் பயிற்சி , யோகா பயிற்சி, சைக்கிள் பயிற்சி , நீச்சல் பயிற்சி, ஜிம்மில் பயிற்சி செய்தல்  போன்றவை அதில் முக்கியமானதாக உள்ளனர். முதலில் மெதுவாகத் தொடங்கி, உடலின் சக்திக்கு ஏற்ப பயிற்சியின் நேரம் மற்றும் அதிநிலையை அதிகரிக்க வேண்டும். காலை நேரம் மிகச் சிறந்தது, ஏனெனில் அந்த நேரத்தில் சுத்தமான காற்று கிடைக்கும், மேலும் நம்முடைய நாள் முழுவதையும் சுறுசுறுப்பாகக் கடக்க உதவுகிறது. ஒருவரின் வயது, உடல்நிலை, நோய்முதல் வரலாறு ஆகியவற்றைப் பொருத்து உடற்பயிற்சி முறையை தேர்வு செய்ய வேண்டும்.


உடற்பயிற்சி என்பது ஒரு நாள் செய்வது அல்ல.  தினமும் அன்றாட செயல்களில் எடுக்க வேண்டும். தொடர்ந்து  செய்யும்போதுதான் அதன் முழு பலன்களையும் நம்மால் அனுபவிக்க முடியும். நல்ல உணவு பழக்கவழக்கங்களுடன் கூடிய உடற்பயிற்சி செய்தல், நம்மை ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிநடத்தும். ஆகவே, ஒவ்வொருவரும் தினசரி தங்கள் நேரத்தில் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சிக்கு ஒதுக்க வேண்டும்.


யோகா மூலம் கிடைக்கும் நன்மைகள்:

யோகா என்பது உடல், மனம் மற்றும் ஆன்மாவின் ஒருமைப்பாட்டை நோக்கி வழி நடத்தும் பழமையான இந்திய முறையாகும். யோகா மூலம் உடலையும் மனதையும் ஒருங்கிணைக்க முடிகிறது. இங்கு யோகா மூலம் நமக்கு கிடைக்கும் முக்கியமான நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன:


உடல்ரீதியான நன்மைகள்:

உடல் நெகிழ்வுத்தன்மை (Flexibility) அதிகரிக்க செய்கிறது. தசைகள் மற்றும் மூட்டுகளில் நெகிழ்வு அதிகரிக்கிறது.உடலின் முக்கியமான பகுதியான  தசை வலிமை (Muscle Strength)  பெறுகின்றது.

முதுகுத் தூணின் நிலைமை சரியாக்கி, சீரானஉடல் அமைப்பு உருவாகிறது. உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் சீராக ரத்தம் செல்ல உதவுகிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

பிராணாயாமம் மூலம் சுவாச முறை சீராகி, நுரையீரல் திறன் மேம்படுகிறது.






மனநல நன்மைகள்:

                                         தியானம் மற்றும் சுவாச கட்டுப்பாடு மூலம் மன அமைதி கிடைக்கும்.

கவனம், ஞாபக திறன் மற்றும் மூளையின்  செயல்பாட்டை  அதிகரிக்க செய்கிறது. தீவிரமான மனச்சோர்வை குறைத்து, தூக்கத்தை மேம்படுத்துகிறது. அக சிந்தனை வளர்ச்சி, ஆன்மீக நலன், மன அமைதி ஆகியவை உருவாகின்றன.

யோகாவின் பிரிவுகள்:





ஹதயோகா (Hatha Yoga):

  • உடலியல் மற்றும் சுவாச கட்டுப்பாடுகளை அடிப்படையாக கொண்டது.


ராஜயோகா (Raja Yoga):

  • மன கட்டுப்பாடு, தியானம் மற்றும் ஆன்மிகத்தைப் பற்றியது.


பக்தியோகா (Bhakti Yoga):

  • பக்தி, இறைவன் மீது கொண்ட காதலை அடிப்படையாகக் கொண்டது.


ஞானயோகா (Jnana Yoga):

  • ஞானம் மற்றும் தத்துவங்களைப் புரிந்து கொண்டு செய்யும் யோகம்.


கர்மயோகா (Karma Yoga):

  • பணி மூலம் ஆன்மிக வளர்ச்சி அடைய உதவும்.


யோகா அனைத்திற்கும் நல்லது:


குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை யோகாவை எளிதாக பயிற்சி செய்யலாம். நோய்கள் உள்ளவர்களும் குறிப்பிட்ட ஆசனங்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி செய்யலாம்.இது ஒரு இயற்கையான, மருந்தில்லா சிகிச்சை முறையாகவும் பயன்படுத்தப்படுகிறது.

தியானம் (Meditation):

தியானம் என்பது மனதை ஒருங்கிணைத்துக் கொண்டு,  கவனத்தை வைத்திருக்கும் பயிற்சி ஆகும். இது மன அமைதி, உணர்ச்சி கட்டுப்பாடு மற்றும் ஆன்மிக நலனை வழங்குகிறது.

கவனத்தில் கொள்ள வேண்டியவை:

  • யோகா செய்யும் முன் மருத்துவரின் ஆலோசனை பெறுங்கள் (சுகாதார நிலையைப் பொருத்து)
  • எப்போதும் மென்மையான மெட் (Yoga mat) பயன்படுத்துகள்.
  • உடல் அசௌகரியமிருந்தால் உடனே நிறுத்தவும்.
  • யோகாவை நேர்மையாக, நிதானமாக செய்ய வேண்டும்.


Post a Comment

0 Comments