Ad Code

How To Reduce Weight Loss Naturally in Tamil (100% Natural Product Only):10 நாட்களில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே விரைவில் உடல் பருமனை குறைக்க ஈஸியான டிப்ஸ்

உடல் பருமனை வெகு விரைவில் குறைக்க நினைப்பவர் எல்லோருக்கும் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.வெளிஊர்களில் விடுதியில் தங்கி வேலை செய்துகொண்டிருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் உணவு முறை மாற்றத்தினால் உடல் பருமனால் அவதிப்படுவார்கள். சில பேர் தின்பண்டங்களை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு உடல் பருத்து காணப்படுவர். இன்னும் சிலருக்கு உடலினுள் ஏற்படும் பாதிப்பினால்  வயிறு பருமனால் அவதிப்படுவார்கள். உடல்  பருமன் எதனால் ஏற்படுகிறது தெரியுமா? தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள். சொல்கிறேன் கேளுங்கள். 



  1. கொழுப்புள்ள வறுத்த உணவுகளை அதிகம் உண்பது உடலுக்கு கேடு தரும். 
  2. தினமும் சோம்பலான வாழ்க்கை முறையை பின்பற்றுவது (காலையில் விழிப்பதில் தாமதம் கொள்வது, சாப்பிடும் உணவில் கவனம் செலுத்தாது இருத்தல், மதியநேரம் தூங்குவது, இரவில் தாமதமாக தூங்குவது)
  3. வீட்டில் உடற்பயிற்சி செய்யும்போது ஒருநாள் செய்தும் மறுநாள் செய்யாமலும் இருப்பது
  4. புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற கெட்ட பானங்களை அருந்தினால் உடல் பருமன் அதிகரிக்கும். 
  5. நோய்களுக்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரை பக்கவிளைவை ஏற்படுத்தி உடல் பருமனை அதிகரிக்கும்.                                      
  6. உடல் பருமனை குறைப்பதற்காக உணவு உண்ணாமல் இருப்பதாலும் வயிற்றில் பருமன் ஏற்படலாம்.
  7. கொழுப்புள்ள உணவுகள்  அதிகம் சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்கும். கறி உணவுகளை அளவுக்கு மீறி சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்கும்.  
  8. ஹோட்டலில் (உணவு விடுதி) உணவு சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்கும்.
  9. வீணாகி விடுமோ என்று தேவையற்ற உணவுகளை சாப்பிடுவது உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
  10. சர்க்கரை உணவுகளை முடிந்தவரை தவிருங்கள் அதனாலும் உடல் பருமன் ஏற்படலாம். 


மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் வாழ்க்கையில் பின்தொடருங்கள்.. அப்போதுதான் உடலை ஆரோக்கியமானதாகவும், உடலில் தேவையற்று  படிந்துள்ள கொழுப்புகளை  குறைக்கவும்  முடியும். 

எனக்கு தெரிந்த அற்புதமான உடல் பருமனை விரைவில் குறைக்கும் டிப்ஸ் ஒன்றை கூறப்போகிறேன். கவனமாக பாருங்கள். நான் சொல்லும் இந்த டிப்ஸை தொடர்ந்து பின்பற்றினால் பத்து நாட்களில் உங்கள் உடல் பருமன் குறைந்து இருப்பதை உணர்வீர்கள். வீட்டில் இருக்கும் நான்கு பொருட்களை வைத்து மட்டுமே ஈஸியான முறையில் இயற்கையாக உடல் பருமனை எளிதாக குறைக்க முடியும். 


தேவையான பொருட்கள்:


                                                      இஞ்சி - சிறிது துண்டு 


                                                       பூண்டு - 2 பல்லு 


                                                         கொள்ளு - 1/2 Tps


                                                        எலும்பிச்சைபழம் -பாதி 


இஞ்சி, பூண்டு, கொள்ளு ஆகிய மூன்றையும் உரலில் போட்டு மென்மையாக நசுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் பாதி எலும்பிச்சைப்பழத்தின் ஜாரை பிழிய வேண்டும். அவ்வளவு தான் அற்புதமான உடல் எடையை குறைக்கும் ரெமிடி தயார். இரவு தூங்கும் முன் தயார் செய்துவிட்டு காலையில் எழுந்து பருக வேண்டும். பருகிய பின் வெதுவெதுப்பான சூடுதண்ணீரை பருகினால் உடல் எடை வெகு விரைவில் குறையும்.  





 

Post a Comment

0 Comments