Ad Code

குறைந்த விலையில் வீட்டில் இருந்து தயாரிக்கப்பட்ட பேஸ் மசாஜ் ஆயில் 100% முகம் பளபளப்பாகவும், பொலிவுடனும் மாற இயற்கையான தீர்வு (Face Brightening and Glowing Massage Oil in Tamil) )

முகம் பொலிவுடனும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள். காரணம் என்னவென்றால் கண்ணாடியில் முகத்தை பார்க்கும் போது ஒருவித சந்தோஷம் ஏற்படும். உள்ளுக்குள் தன்னம்பிக்கையும் ஏற்படும்.சீக்கிரமாக முகம் வெள்ளையாக வேண்டும் என்பதற்காக அழகு நிலையத்திற்கு சிலர் செல்வார்கள். அதை தவிர்த்துவிடுங்கள். குறைந்த விலையில் முகம் தங்கம் போல் ஜோலி ஜோலிக்க எளிய  இயற்கையான வீட்டில் இருந்தே தயாரிக்க கூடிய அருமையான பேஸ் க்ளோ(Face Glow) & பேஸ் மசாஜ்(Face Massage Oil) ஆயில் தயாரிக்கும் குறிப்பு கீழே உள்ளது. படித்து பயன்பெறுங்கள். 

அழகுகுறிப்பு பொருட்களின் பயன்கள்:

கேரட்:

      தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட்டை சாப்பிட்டால்  சரும பிரச்சனைகள், முதுமை தோற்றம் ஆகிய பிரச்சனைகள் தீர்வதோடு உடலின் ஆரோக்யத்திற்கும் என்னிலடங்கா பயன்களை கேரட் தருகிறது. கேரட்டில் கரோட்டினாய்டுகள் உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்டாக  உருமாறி உடல் முழுவதும் சுத்தம் செய்ய பயன்படுகிறது. இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் இதை ஜூஸ் ஆக பருகும் போது உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்கிறது. மேலும் கேரட்டை  சருமத்திற்கு பேஸ்பேக் ஆகவும் பயன்படுத்தலாம். 

பீட்ருட்:

 பீட்ருட் முகம் மற்றும் உடலின்  நிறத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகுக்கிறது.  வறட்சியான சருமம்,கரும்புள்ளி,கருவளையம், சருமசுருக்கம், முகப்பரு என பல சரும பிரச்சனைகளை பீட்ருட்டை பயன்படுத்தி தீர்வு காணலாம். பீட்ருட் ஜூஸை பருகினால் ரத்தத்தின் அளவை அதிகரிப்பதோடு இளமை தோற்றத்திற்கும், முக பொலிவுக்கும் நல்ல பானமாக பீட்ரூட் இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. பீட்ரூட்டை பச்சையாகவும் சாப்பிடலாம் உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.  பேஸ்பேக்காக பயன்படுத்தினால் முகத்தில் நல்ல மாற்றம் கிடைக்கும்.

 தேங்காய் எண்ணெய்:

                                 தேங்காய் எண்ணெய்  சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கும், மென்மையாக்குவதற்கும் சிறந்தவையாக இருக்கிறது. முகம் வறண்டு காணப்பட்டால் சுத்தமான தேங்காய் எண்ணெயை முகத்தில் மசாஜ் செய்தால் முக வறட்சி நீங்கி முகம் மென்மையாக காணப்படும். தோல் பிரச்சனைகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தேங்காய் உதவியாக உள்ளது. 

 ஆலிவேரா ஜெல்:

                         ஆலிவேரா ஜெல்லை  முகத்தில் தடவினால் கரும்புள்ளிகள், பருக்கள், முக சுருக்கம், வயதான தோற்றம் ஆகிய பிரச்சனைகள் நீக்க  வல்லதாக இருக்கிறது. சருமத்தில் நீர் சத்துக்களை தக்க வைக்க உதவுகிறது. சருமத்தை வெயிலில் இருந்து காக்க ஆலிவேரா ஜெல் பயனுள்ளதாக இருக்கிறது.

தேவையான பொருட்கள்:

கேரட் -2

பீட்ருட் -1(சிறிய பீட்ருட்)

சுத்தமான தேங்காய் எண்ணெய் (எந்த எண்ணெய் வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம்)- தேவையான அளவு 

வீட்டில் தயாரித்த ஆலிவேரா ஜெல்(வீட்டில் தயாரித்த ஆலிவேரா ஜெல் இல்லையென்றால் கடையில் உள்ளதை பயன்படுத்திக்கொள்ளுங்கள்) - 3 Tsp


கேரட் மற்றும் பீட்ரூட்டை குட்டி குட்டி பீஸ் ஆக சீவி வைத்துக்கொள்ளுங்கள். அதனுடன்  சுத்தமான தேங்காய் எண்ணெய் தேவையான அளவு விட்டு மிதமான சூட்டில் நன்கு கிளறி விடவும். பின் சிறிது நேரம் கழித்து வீட்டில் தயாரித்த ஆலிவேரா ஜெல்(கடையில் வாங்கிய ஆலிவேரா ஜெல்) சேர்த்து கரண்டியால் 10-20 நிமிடம் மிதமான சூட்டில் கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவுதான் முகத்தை பளப்பளப்பாக மாற்றும்  மசாஜ் ஆயில் தயார். இந்த மசாஜ் ஆயிலை காற்று புகாத பாட்டிலில் சேகரித்தும் வைத்து கொள்ளலாம். ஒரு நாளைக்கு காலை மற்றும் மாலை என்று இரு முறை பயன்படுத்துங்கள்.  முகம் க்ளோவ்வாகவும், பொலிவுடனும் மாறும். 




 



Post a Comment

0 Comments