இந்தியாவில் பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள் பெரும்பாலானோர் உழைப்பதிலே அதிக ஈடுபாடு கொண்டிருந்ததால் உடலை பாதுகாப்பதில் அக்கறை செலுத்தியதில்லை. ஆனால் இப்பொது உள்ள காலக்கட்டத்தில் தொழில் நுட்பம் வளர வளர மக்கள் முகத்தையும், உடலையும் பேணுவதில் அதிக அக்கறையும் கவனமும் செலுத்திகின்றனர். சில பேர் அழகு நிலையத்திற்கு சென்று தேவையில்லாத சிகிச்சைகளை செய்து பக்கவிளைவுகள் ஏற்பட்டு அவதிப்படுவதை பார்க்கின்றோம். இயற்கை முறை முதலில் காலம் தாழ்த்தும். ஆனால் இறுதியில் நல்ல பலனைக் கொடுக்கும். பக்கவிளைவுகள் எதுவும் இருக்காது. அதனால் அழகு நிலையத்திற்கு செல்லாமல் வீட்டிலே இயற்கை முறையில் தோலை பராமரிப்பது உடல் நலத்திற்கு மிக மிக நல்லது.
தினமும், முகத்தை இரண்டு முறை மெதுவாக சுத்தம் செய்ய வேண்டும். இது மாசு, எண்ணெய் மற்றும் இறந்த செல்களை நீக்க உதவுகிறது. அதற்குப் பிறகு டோனர், சீரம் மற்றும் மாய்ச்சரைசர் (moisturizer) பயன்படுத்துவது அவசியம். சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பதற்காக (SPF) உள்ள சன்ஸ்கிரீன் தவறாமல் பயன்படுத்த வேண்டும். வாரத்தில் ஒருமுறை எக்ஸ்ஃபோலியேஷன் செய்து, சருமத்தின் மேல் இருக்கும் இறந்த செல்களை நீக்கலாம். இயற்கை முகமூடிகள், ஆலிவ் ஆயில், தேன், தயிர் போன்றவை சருமத்திற்கு சத்துக்களும் ஈரப்பதமும் தரும். சரும வகைக்கு ஏற்ப பொருட்கள் பயன்படுத்துவதும், மிதமான மற்றும் இயற்கையான தயாரிப்புகளை தேர்ந்தெடுத்தல் மிகவும் அவசியம். இது முகத்தை பளிச்சென்று வைத்திருக்க உதவும்.
ஃபேஸ் சீரம் (Face Serum)
வீட்டிலே எளிமையான முறையில் ஃபேஸ் சீரம் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பீட்ருட்(Beetroot) - 1 (சிறியது)
கேரட்(Carrot) - 1
பப்பாளி (Papaya)- 5 துண்டு(5 Pieces)
பீட்ருட், கேரட், பப்பாளி இவை மூன்றையும் மிக்சி ஜாரில் போட்டு அரைத்து ஜூஸ்ஸாக எடுத்துக் கொள்ளுங்கள்.
ஆலிவேரா ஜெல்(Aloe Vera Gel) - 4 டேபிள்ஸ்பூன்(உங்கள் விருப்பம் போல் எடுத்துக்கொள்ளுங்கள்)
கிளிசரின்(Glycerin) - 2 டேபிள்ஸ்பூன்(உங்கள் விருப்பம் போல் எடுத்துக்கொள்ளுங்கள்)
விட்டமின் இ கேப்ஸுல்ஸ்(Vitamin E Capsules)- 4
பீட்ருட், கேரட், பப்பாளி ஜூஸ்-உடன் ஆலிவேரா ஜெல், கிளிசரின், விட்டமின் இ கேப்ஸுல்ஸ் சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் அருமையான ஃபேஸ் சீரம் (Face Serum) தயார். இதை கிரீம் பாஸ்க்சில்(Cream Box) போட்டு வெகு நாட்கள் வைத்துக்கொள்ளுங்கள். காலை இரவு என்று இரு நேரம் பயன்படுத்துங்கள் நல்ல மாற்றம் இருக்கும்.
0 Comments
Comments