Ad Code

வெயிலின் தாக்கத்தால் முகம் மற்றும் கை கருமையாக இருக்கிறதா? கவலையவிடுங்க. உங்களுக்கான அருமையான டிப்ஸ்...மிஸ் பண்ணிடாதிங்க

சூரிய வெப்பம்  நம் வாழ்கையில் தவிர்க்க முடியாதது. நாம் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வரும்போது  முகம் மற்றும் கைகள் கருமையாக மாறுவது இயல்பான ஒன்று.இது எப்படி நிகழ்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? சூரியனில் இருந்து வரும் UV (Ultraviolet) கதிர்கள் நமது தோலை தாக்கும் போது, நம் தோல் தன்னைக் காத்துக்கொள்ள மெலனோசைட்ஸ் என்ற செல்களை இயக்கி மெலனின் என்ற பிக்மெண்ட் (நிறப் பொருள்) அதிகமாக உற்பத்தி செய்ய வைக்கிறது. மெலனின் அதிகம் உற்பத்தியாகும் போது, அது தோலை கருமையாக மாற்றுகிறது. இதுதான் சூரிய வெப்பத்தால் முகம் மற்றும் கைகள் கருமை அடைவதற்கான முக்கிய காரணம்.



இது ஒரு விதத்தில் இயற்கையான பாதுகாப்பு தான் . ஏனெனில் மெலனின் தான் தோலை சூரிய UV கதிர்கள் ஏற்படுத்தும் ஆழ்மட்ட சேதங்களிலிருந்து பாதுகாக்கும். ஆனால் வெளிப்படையான தோல் நிறம் கருமையாக மாறுவதால், நிறம் மாறிய தோல் அழகில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் நீண்ட காலமாக தொடர்ந்தால், தோலில் உரோமம் உண்டாகும், வயதான தோல் போன்ற சுருக்கங்கள் வரும், சில நேரங்களில் கரும்புள்ளிகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. 

முகம் மற்றும் கைகள் ஏன் அதிகம் கருமை அடைகின்றன?


முகம் மற்றும் கைகள் சூரிய ஒளிக்கு நேரடியாக அதிக நேரம் வெளிப்படுகின்ற பகுதிகள். முழுக்க மூடிப் போகாத இந்த பகுதிகள் தினசரி சூரிய வெப்பத்திற்கும் கதிர்வீச்சிற்கும் அதிகமாக இடம் கொடுப்பதால், மெலனின் அதிகரிப்பு அங்கு அதிகமாகவே இருக்கும்.

உட்புற ஆரோக்கியம் கூட முக்கியம்:




நீர் அதிகமாக குடிப்பது, பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது, உடலை உள்ளிருந்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது தோல் நிறத்தை சீராக்க உதவும். இது சருமத்தின் இயற்கையான ஒளி மற்றும் மெருகை கூட்டும்.

முகம் மற்றும் கைகள் கருமையாக மாற முக்கிய காரணம்:




  • அதிக நேரம் சூரிய ஒளியில் இருப்பது (சூரியஒளி அதிகமாக இருக்கும்  நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை)
  • முகம் மற்றும் கைகளை பாதுகாக்காமல் வெளியே செல்வது தவிர்க்க வேண்டும்.
  • வீட்டுக்கு வந்த பின் முகம் மற்றும் கைகளை இயற்கை கலவைகள் கொண்டு சுத்தம் செய்யாதிருப்பதை தவிர்க்க வேண்டும்.
  • சன்ஸ்கிரீன் பயன்படுத்துதல் மற்றும் சரியான சன்ஸ்கிரீன் பார்த்து பயன்படுத்துங்கள். 2-3 மணி நேரத்திற்கு ஒருமுறை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.

சூரிய ஒளியின் கதிர்விச்சால் ஏற்பட்ட கருமையை போக்க  அழகு நிலையத்திற்கு சென்று அதிக செலவு செய்து  சரிசெய்வார்கள். கருமையை நீங்கிவிடும். ஆனால் தொடர்ந்து அழகு நிலயத்திற்கே சென்று கொண்டிருந்தால் வீட்டில் இருக்கும் அனைத்து பணத்தையும் அழகு நிலையத்திற்கு தான் கொடுக்கவேண்டியதிருக்கும். 



இதை சரி செய்ய என்னிடம் ஒரு யோசனை உள்ளது. அழகு நிலையத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே எளிய முறையில் முகம் மற்றும் கையில் இருக்கும் கருமையை போக்கிவிடலாம். எப்படி என்று கீழே பார்க்கலாம். 


தேவையானப் பொருட்கள்:


  • காபி பவுடர் - 1/2 டேபிள்ஸ்பூன் 
  • தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
  •  மஞ்சள் தூள் -1/2 டேபிள்ஸ்பூன் 
  • எலுமிச்சைப்பழம் - பாதி 
  • தேன் - 1 டேபிள்ஸ்பூன் 


காபி பவுடர், தயிர், எலுமிச்சைப்பழம், மஞ்சள் தூள், தேன் ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளுங்கள். பத்து  நிமிடம் கழித்து முகத்தில் பூசி  முகம் மற்றும் கைகளில் 10- 15 நன்கு ஸ்கிரப் செய்யுங்கள். தொடர்ந்து ஒரு வாரம் செய்தால் முகம் மற்றும் கைகளில் கருமை நீங்கியிருப்பதை உணர்வீர்கள். முகம் மற்றும் கைகளில் மட்டும் இல்லாமல் உடம்பில் எங்கேல்லாம் கருமையாக இருக்கிறதோ அங்கெல்லாம் பயன்படுத்துங்கள். நல்ல பலன் கொடுக்கும்.


சூரிய வெப்பத்தால் முகம் மற்றும் கைகள் கருமையாக மாறுவது ஒரு இயற்கையான செயல்பாடு என்றாலும், அதை அடையாதவாறு பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் மிகவும் அவசியம். இவை நம்முடைய தோல் ஆரோக்கியத்தை நீண்டகாலம் பாதுகாக்கும்.



Post a Comment

0 Comments