செம்பருத்திப் பூவின் சிறப்பு அம்சங்கள்
செம்பருத்தி பூ (Hibiscus Rosa-Sinensis) இந்தியாவிலும், உலகின் பல நாடுகளிலும் காணப்படும் அழகான மற்றும் மருத்துவ குணமுள்ள பூவாகும். இது பொதுவாக சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை, ஊதா போன்ற நிறங்களில் காணப்படுகிறது. ஆனால் மருத்துவ குணம் வாய்ந்தது பெரும்பாலும் சிவப்பு செம்பருத்தி பூவாகவே இருக்கிறது.
இது இந்தியாவில் பரவலாக காணப்படும். நிறைய மக்கள் செம்பருத்திப் பூவை வீடுகளிலும் வளர்த்து வருவார்கள். ஆனால் அதை பயன்படுத்துவது இல்லை. பூ காய்ந்து காணப்படும். செம்பருத்தி பூவின் இலைகள், பூக்கள் இரண்டும் ஆயுர்வேதம், சித்தம் மற்றும் இயற்கை மருத்துவத்தில் பல நோய்களுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன.
சருமப் பராமரிப்பு:
சரும பராமரிப்புக்கு செம்பருத்தி பூ மிகுந்த பயன் நிறைந்தது. இதில் இயற்கையான AHA (Alpha Hydroxy Acids) உள்ளது, இது சருமத்தை மென்மையாக்கி,செல்களை நீக்க உதவுகிறது. முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்களை குறைக்கும் தன்மை கொண்டது.
செம்பருத்தி பூ வைட்டமின் சி-ஐ நிறைவாக கொண்டுள்ளது. பூவை அரைத்து முகக்கவசமாக பயன்படுத்தினால் எண்ணெய் அதிகமுள்ள சருமத்திற்கு சிறந்த பராமரிப்பு அளிக்கும். மேலும், செம்பருத்தி பூவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்கள் சருமத்தை நச்சுச்சேர்மங்களிலிருந்து பாதுகாக்கின்றன. இதை தலையில் தேய்த்தால் பொடுகும் குறையும். சருமத்தை இளமையாகவும், புத்துணர்வாகவும் வைத்திருக்க செம்பருத்தி பூ அற்புதமான தீர்வாக அமைகிறது.
முடி வளர்ச்சிக்கு உதவும் செம்பருத்தி பூ:
செம்பருத்தி பூ கூந்தல் வளர்ச்சிக்காக மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த பூவிலும் இதன் இலைகளிலும் உள்ள உயிர்ச்சத்து மற்றும் ஃபிளாவனாய்ட்கள் கூந்தலின் வேர்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, வலிமையடைய உதவுகிறது. இது முடி உதிர்வை தடுக்கும், புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும், மற்றும் முடியை மென்மையாக்கும் தன்மை கொண்டது. செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி தேய்த்தால் சிறந்த முடிவுகள் கிடைக்கும்.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்:
செம்பருத்திப் பூ ஆன்டி–ஆக்ஸிடன்கள் மற்றும் பைஃபிலாவனாய்ட்கள் (bioflavonoids) இரத்த நாளங்களில் உள்ள அழுத்தத்தை குறைத்து, இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகின்றன. செம்பருத்தி சாறு ஹெர்பல் டீயாக அருந்தினால் உயர் இரத்த அழுத்தத்தை இயற்கையாக குறைக்கும்.
இதன் சிறப்பம்சம் என்னவெனில், இது பக்கவிளைவுகள் இல்லாமல் நுண்ணியமாக உடலுடன் வேலை செய்கிறது. தினமும் வெந்நீரில் இப்பூவை ஊறவைத்து குடிப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தில் தெளிவான கட்டுப்பாடு ஏற்படும். இது இருதய நலத்தையும் பாதுகாக்கும். சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவங்களில் செம்பருத்தி பூ, இரத்த அழுத்த சிகிச்சையில் பரிந்துரைக்கப்படும் முக்கிய மூலிகையாக இருக்கிறது.
தூக்கமின்மை பிரச்சனையை போக்கும்:
செம்பருத்தி பூவின் ஓர் அரிய பண்பு என்னவென்றால், இது தூக்கத்தை மேம்படுத்தும். நரம்பு சோர்வு மற்றும் மனஅழுத்தத்தை குறைக்கும் திறன் இதில் உள்ளது. பூவின் சாறை இரவில் அருந்தினால் மனம் நிம்மதியடையும். மேலும், இது சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் மூலிகை ஆகவும் கருதப்படுகிறது. சிறுநீரில் ஏற்படும் தொற்றுகள் மற்றும் பாதிப்புகள் குறைவதற்கான இயற்கை தீர்வாக இது பயன்படுத்தப்படுகிறது.
மாதவிடாய் வலியை போக்கும் :
மாதவிடாய் பிரச்சனைகளை நீக்க செம்பருத்தி பூ ஒரு இயற்கையான மற்றும் பாதுகாப்பான தீர்வாகும். இதில் உள்ள ஆன்டி–ஆக்ஸிடண்ட்கள், பைட்டோகெமிக்கல்கள் மாதவிடாய் சுழற்சியை சீரமைக்க உதவுகின்றன. மாதவிடாய் தாமதம், அதிக வலி மற்றும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவதில் இது பெரிதும் பயன்படுகிறது. செம்பருத்தி பூவை சுடுநீரில் ஊறவைத்து தினமும் அருந்துவதால் மாதவிடாய் சீராக வரும்.
இதன் நரம்பு நிவாரண தன்மை மனஅழுத்தத்தை குறைத்து, ஹார்மோன்களின் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. சித்த மருத்துவத்தில் இது மாதவிடாய் சீராக்கும் முக்கிய மூலிகையாக பரிந்துரைக்கப்படுகிறது. பக்கவிளைவுகள் இல்லாமல் மாதவிடாய் நலத்தை மேம்படுத்தும் ஒரு இயற்கை மருந்தாக செம்பருத்தி பூ விளங்குகிறது.
நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:
செம்பருத்தி சாறு உடல் நலத்திற்கு பல நன்மைகளை தரும். இதில் வைட்டமின்கள் அதிகளவில் உள்ளதால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குறிப்பாக இது இரத்த அழுத்தத்தை இயற்கையாக கட்டுப்படுத்துவதில் உதவுகிறது. ஆய்வுகள் சில, செம்பருத்தி சாறை தினமும் அருந்துவதால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதை சமநிலைப்படுத்தலாம் என கூறுகின்றன. இதற்கு அத்தகைய பக்கவிளைவுகள் கிடையாது என்பதும் இதன் சிறப்பாகும்.
0 Comments
Comments