இயற்கையான ஸ்கிரப்(உதடு)
ஒருவர் மற்றவரிடம் பேசும்போது முதலில் கண்களை பார்த்துதான் பேசுவார்கள். கண்களுக்கு அடுத்தப்படியாக பார்ப்பது உதட்டைதான்.அதனால் உதட்டின் அழகும் முக்கியமானதாக கருதப்படுகிறது. உதடு வறண்டு கருமைநிறத்தில் இருந்தால் உங்களின் முகம் பார்ப்பதற்கு அழகு குறைந்து காணப்படும்.சில பேர் உதட்டின் அழகை பாதுகாக்க, லிப் ஸ்டிக், லிப் க்ளாஸ், லிப் பாம் ஆகிய ரசாயன பொருட்களை பயன்படுத்துவார்கள். இதை உதட்டில் பயன்படுத்தினால் நீங்கள் பேசும்போதோ அல்லது உணவு அருந்தும்போது உங்கள் வாய்வழியாக வயிற்றுக்குள் சென்று நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ரசாயன பொருள் வாங்குவதை முற்றிலுமாக தவிர்த்திடுங்கள். இந்த ரசாயன பொருளை தவிர்த்துவிட்டாலும் உதட்டின் கருமை நிறத்தை எப்படி போக்குவது என்ற கேள்வி உங்களிடம் வரலாம். கவலையை விடுங்க. வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்தே உங்களின் உதட்டை இளஞ்சிவப்பு நிறத்தில் மாற்றி விடலாம் உங்களுக்காக சிறந்த இயற்கை முறை இதோ.
தேவையான பொருட்கள்:
- எலும்பிச்சைப்பழம் - பாதி
- மஞ்சள்த்தூள்-1/2 Tsp
- பீட்ருட் ஜூஸ் - 1 Tsp
- தேன் -1 Tsp
- சுத்தமான தேங்காய் எண்ணெய்-1Tsp
அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். பின் உதட்டில் பூசி 15 நிமிடம் நன்கு ஸ்கரப் செய்ய வேண்டும். 15 நிமிடம் கழித்த பிறகு உதட்டை கழுவிப் பாருங்கள். நீங்களே ஆச்சரியத்தில் வியந்து விடுவீர்கள். உதடு இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியிருக்கும்.
வெளி இடங்களில் இருக்கும் நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது அழகாக தெரியவேண்டும் என்பதற்க்காக செயற்கை ரசாயன பொருட்களான லிப் பாம்களை பயன்படுத்துவீர்கள். அது உங்களின் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று தெரியாதா? தெரிந்திருந்தால் வாங்கியிருக்கமாட்டிர்கள். கடையில் இருக்கும் லிப் பாம்களை பயன்படுத்தினால் உடலினுள் நிறைய மாற்றங்கள் ஏற்படலாம். வயிற்றுக்குள் சென்று நோய்கள் வரும். உதடு கருமை நிறத்தில் மாறும்,உதட்டில் புண்கள் வரும், உதட்டில் விரிசல்கள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. அதனால் அதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிய முறையில் லிப் பாம் தயாரித்துவிடலாம்.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் ஜூஸ்- 2 Tsp
ஆலிவேரா ஜெல்- 3 Tsp
கிளிசரின்- 1 Tsp
பீட்ரூட் ஜூஸ், ஆலிவேரா ஜெல், கிளிசரின் ஆகிய மூன்றையும் நன்கு கலக்கி கொண்டு உதட்டில் பூசவும். வெகு நாட்கள் வரை பாட்டிலில் வைத்து பயன்படுத்தலாம்.
0 Comments
Comments