Best Skin Glowing and Whitening Face-Pack:வெறும் 30 நிமிடத்தில் உங்கள் முகம் பொலிவு பெறவேண்டுமா? இதோ உங்களுக்கான அருமையான டிப்ஸ். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே உங்களின் முகத்தை வெள்ளை நிறத்தில் மாற்றிவிடலாம்.
உலகத்தில் மனிதர்களாக பிறக்கும் அனைவரும் அழகுதான். சில பேர் வெள்ளை நிறத்தில் இருப்பார்கள். சில பேர் கருமை நிறத்தில் கலையாக இருப்பார்கள். இன்னும் சில பேர் புது நிறத்தில் இருப்பார்கள்(வெள்ளை நிறமும் , கருப்பு நிறமும் சேர்ந்து) இவர்கள் அனைவரும் கடவுளால் இயற்கையாக படைக்கும் போதே அழகாக இருப்பார்கள். தொழில்நுட்பம் வளர வளர இப்பொது உள்ள காலக்கட்டத்தில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட கிரீம், அழகு நிலையம், பிளாஸ்டிக் சர்ஜரி என்று நிறைய வந்துவிட்டனர். இவற்றை முதலில் பயன்படுத்தும் போது நன்றாகத்தான் இருக்கும். ஆனால் சிறிதுநாள் கழித்துதான் அதனுடைய பக்க விளைவை காட்ட ஆரம்பிக்கும். முதலில் இருந்த அழகை விட படும் மோசமாக உங்களுடைய முகம் மாறிவிடும். பணமும் வீணாகிவிடும். அதனால் இதனை முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள். குறைந்த விலையில் இயற்கையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே உங்களின் முகத்தை பொலிவுடனும், அழகாகவும், வெள்ளையாகவும் மாற்றிவிட முடியும். அதற்க்கான எளிய முறைகள் இதோ உங்களுக்காக...
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - பாதி
அரிசி மாவு- 2 Tsp
தேன் - 1 Tsp
காயவைத்த ஆரஞ்சு தோல் அல்லது எலுமிச்சை தோல் பவுடர்-2 Tsp
கஸ்தூரி மஞ்சள்- 1/2 Tsp
உருளைக்கிழங்கை மிஸ்சி ஜாரில் போட்டு மைய அரைத்துக்கொள்ள வேண்டும். பின் அதனுடன் அரிசி மாவு, தேன், காயவைத்த ஆரஞ்சு தோல் அல்லது எலுமிச்சை தோல் பவுடர் சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு கலக்கி கொள்ள வேண்டும். மென்னையான பேஸ்பேக் தயார். குளிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன் முகத்தில் தடவவும். இதனை குளிர்சாதன பெட்டியில் ஒரு வாரம் வரை வைத்தும் பயன்படுத்தலாம்.
முதலில் முகத்தில் படிந்துள்ள கிருமிகளை கழுவிக்கொள்ள வேண்டும். அதற்கு தக்காளியுடன் சர்க்கரை(வெள்ளை சர்க்கரை) சேர்த்து முகத்தை ஸ்கிரப் செய்ய வேண்டும். பின் தயாரித்த பேஸ்பேக்கை முகத்தில் தடவவும். மெதுவாக மசாஜ் செய்யவும். முகம் நன்றாக காய்ந்த பின் முகத்தை கழுவவும். கழுவிய பின் நீங்கள் நினைத்து பார்க்காத அளவுக்கு பொலிவாகவும், வெள்ளையாகவும் மாறியிருப்பதை உணர்வீர்கள்.
0 Comments
Comments