இயற்கையான சுவையான ஜூஸ் ரெசிபி
முகம் வெள்ளையாகவும், பொலிவுடனும் இருக்க அழகு நிலையத்திற்கும், ரசாயன பொருட்களால் தயாரித்த கிரீம்களையும் பயன்படுத்துவார்கள். அது முகத்துக்கும், உடலுக்கும் பாதுகாப்பகத்தான் இருக்கும். ஆனால் சிறிது நாள் மட்டுமே அதனுடைய பலனை காட்டும். அதற்கு அப்புறம் பழைய நிலைக்கே உங்களின் முகம் மாறிவிடும். வெளித்தோற்றத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க கூடாது. உடலின் உட்புறத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தினமும் காலையில் பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்க்கொள்வதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். சில பேருக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவது பிடிக்காது. அவர்கள் ஜூஸ் ஆக பருகலாம். அருமையான முகம் வெள்ளையாக மாற்றக்கூடிய அற்புதமான ஜூஸ் ரெசிபி இதோ உங்களுக்காக.
தேவையான பொருட்கள்:
கேரட் -1
பீட்ருட் - பாதி
பப்பாளி - 5 Piece
ஆப்பிள் - 5 Piece
எலும்பிச்சை பழம் - பாதி
தேங்காய் -தேவையான அளவு
பாதாம் - 3
ஏலக்காய் -2
கருப்பட்டி -தேவையான அளவு (கருப்பட்டி இல்லை என்றால் வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம்)
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை எடுத்துவைத்துக்கொள்ளவும். பின் கேரட், பீட்ருட், பப்பாளி ஆப்பிள், தேங்காய் ஆகியவற்றை எடுத்து சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். எலும்பிச்சைப் பழத்தை பிழிந்து விடவும். அதனுள் பாதாம், ஏலக்காய் போட்டு மிக்ஸி ஜாரியில் அரைக்கவும். அரைத்ததை ஒரு பாத்திரத்தில் அரிப்பினால் அரிந்து குவளையில் ஊற்றி பருகவும். சுவையான முகத்திற்கு பொலிவு தரக்கூடிய ஜூஸ் தயார். தினமும் காலையில் இந்த ஜூஸை பருகுங்கள். முகம் வெள்ளையாக மாறும்.
0 Comments
Comments