Ad Code

குறைந்த செலவில் தலை முடி வளர்ச்சிக்கு உதவும் வீட்டு முறை வைத்தியம்:ஈஸியான இயற்கையான முறை தமிழில்: Hair Care Tips in Tamil

தலை முடி உதிர்தலை குறைக்கும் வீட்டு வழிமுறை

முடி உதிர்தல் இன்று பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் பொதுவான பிரச்சனையாக இருக்கிறது. உடல்நல குறைபாடுகள், மனஅழுத்தம், தவறான உணவுப் பழக்கம், ஹார்மோன் மாற்றங்கள், முறையற்ற தலை முடி பராமரிப்பு  போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. இது இயற்கையாகவே தடையூன்றி மீண்டும் வளரச் செய்ய இயலும். 


இயற்கையான முறைகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், கண்டிப்பாக முடி உதிர்தலை குறைத்து, வலிமையான மற்றும் ஆரோக்கியமான தலைமுடியை பெற முடியும்.குறைவான செலவில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே முடி உதிர்தலை கட்டுப்படுத்த  பயனுள்ள வழிமுறைகள் உள்ளன. அவைகளை பற்றி விளக்கமாக காணலாம்.  

வெந்தயம் (Fenugreek):

வெந்தயம், முடி உதிர்தலைத் தடுக்கும் சக்திவாய்ந்த இயற்கை மருந்தாகும். வெந்தயத்தில் நார்ச்சத்து, புரோட்டீன், நிகோட்டினிக் ஆசிட் மற்றும் லெசிதின் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால்  இவை தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி, முடி வேர்களை வலுப்படுத்தும். இது வறண்ட தலைமுடியை ஈரமாக வைத்து முடி உதிர்வை குறைக்கும். 

வெந்தய எண்ணெய் அல்லது வெந்தயக் குழம்பும் வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்துவது உடலுக்கும் தலைமுடிக்கும் மிக நல்லது. வெந்தயத்தில் உள்ள தனித்துவமான ஊட்டச்சத்துக்கள் தலையிலுள்ள தோலை சுத்தமாக வைத்து, பூஞ்சை தொற்றுகளை தடுப்பதோடு, புதிய முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. அதனால், இயற்கையான முறையில் முடி உதிர்தலை கட்டுப்படுத்த விரும்பும் நபர்களுக்கு வெந்தயம் ஒரு சிறந்த தீர்வாகும்.

தேங்காய் எண்ணெய் (Coconut Oil):

தேங்காய் எண்ணெய், தலை முடியை அடர்த்தியாகவும், கருமையாகவும் வைத்துக்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள லாரிக் ஆசிட், வைட்டமின் இ, மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள் தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தேங்காய் எண்ணெய் தலைமுடிக்கு ஊட்டச்சத்து வழங்கி, முடி வேர்களை பலப்படுத்தி உதிர்வதை தடுக்கும். 

தேங்காய் எண்ணெயை கொதிக்க வைத்து பின் சூடு குறைந்ததும்   வாரத்தில் 2–3 முறை தலை முடியில் நன்கு மசாஜ் செய்தால், இரத்த ஓட்டம் அதிகரித்து புதிய முடி வளர்ச்சிக்கு வழி வகுக்கும். மேலும், இது தலை தோலில் ஏற்படும் உலர்ச்சி, பேன்ட்ரஃப் மற்றும் அழற்சி போன்ற பிரச்சனைகளையும் குறைக்கும். இரவில் தேய்த்து மறுநாள் கழுவுவது சிறந்த பலனை தரும். இயற்கையான மற்றும் ரசாயனமற்ற தேங்காய் எண்ணெயை தலைமுடிக்கு பயன்படுத்தும் போது, முடி பாதுகாப்பாக செயல்பட்டு, நீண்டகாலத்தில் ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

சின்ன வெங்காயம்(Shallots Onion):

சின்ன வெங்காயம், முடி உதிர்தலை குறைக்கும் ஒரு சிறந்த இயற்கை மருத்துவம் கொண்ட  மூலிகைப்  பொருளாகும். வெங்காயத்தில் அதிக அளவில் சல்பர் (Sulfur) உள்ளதால், அது முடி வேர்களை வலுப்படுத்தி, புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. வெங்காயச் சாறை  தலைமுடிக்கு மசாஜ் செய்தால், தலையில் இருக்கும்  தோலின் இரத்த ஓட்டம் அதிகரித்து முடி உதிர்வை குறைக்க உதவுகிறது. அதேசமயம், வெங்காயத்தில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஃபங்கல் தன்மைகள், தலை தோலில் ஏற்படும் தொற்று, கொப்பளிப்புகளை  குறைக்கும் தன்மை கொண்டது. 

வெங்காய சாற்றை வாரத்தில் இரண்டு  முறை தலைமுடிக்கு தேய்த்து முப்பது  நிமிடங்கள் விட்டு விட்டு நன்கு கழுவ வேண்டும். இதன் தொடர்ந்த பயன்பாடு தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துப் புதிய முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. வாசனை குறைக்க வெங்காய சாற்றில் சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பயன்படுத்தலாம். இயற்கையான மற்றும் எளிய முறையாக முடி உதிர்தலை கட்டுப்படுத்த வெங்காயம் மிக சிறந்ததாகும்.

தயிர் (Curd):

தயிர், தலை முடியை மென்மையாக() வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும், முடி உதிர்தலைத் தடுக்கும் ஒரு சிறந்த பொருளாகும் இருக்கிறது. இதில் உள்ள புரோட்டீன், கால்சியம், வைட்டமின் பி5 மற்றும் பாக்டீரியாக்கள் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி, வேர்களை வலுப்படுத்தும்.

மேலும், தலைமுடிக்கு ஈரப்பதத்தை கொடுத்து உலர்ச்சி மற்றும் கொப்பளிப்பை குறைக்கும். இதனால் தலைமுடி ஆரோக்கியமாக இருந்து, முடி உதிர்தல் குறைகிறது. வாரத்தில் 1 அல்லது 2 முறை தயிர் ஹேர் மாஸ்க்காக பயன்படுத்தினால், முடி மென்மையாகவும், வலுவாகவும் மாறும். தயிர் ஒரு இயற்கையான கண்டிஷனராக செயல்பட்டு, முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் வகையில் சிறந்த தீர்வாக இருக்கிறது.

கருவேப்பிலை(Curry leaf):

கருவேப்பிலை, முடி உதிர்தலைக் குறைக்கும் இயற்கை மூலிகையாகும். இதில் வைட்டமின் ஏ, பி, சி, இ  மற்றும் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை முடி வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்வை தடுக்கும் திறன் கொண்டது. கருவேப்பிலையை எண்ணெயில் கொதிக்க வைத்து அதை தலைமுடிக்கு தேய்த்தால், இரத்த ஓட்டம் அதிகரித்து புதிய முடி வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. 

மேலும், இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள் தலை தோலில் உள்ள தொற்று மற்றும் கொப்பளிப்புகளை நீக்க உதவுகின்றன.மேலும் இது தலைமுடிக்கு ஈரப்பதம் வழங்கி, வறட்சியை குறைக்கும். வாரத்தில் இரண்டு  முறை கருவேப்பிலை பவுடரையை  தலை முடிக்கு பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்தல் கட்டுப்படும் மற்றும் தலைமுடி ஆரோக்கியமாக வளரும். இயற்கையான மற்றும் பாரம்பரியமான இந்த முறையானது பாதுகாப்பாகவும், விளைவின்றியும் முடி வளர்ச்சிக்கும்  சிறந்ததாகும்.

வேப்பிலை (Neem Leaves): 

வேப்பிலை, முடி உதிர்தலைக் குறைக்கும்  சக்திவாய்ந்த இலையாகும் . இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஃபங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் தன்மைகள் தலைமுடியில் ஏற்படும் தொற்றுகளைத் தடுக்க உதவுகின்றன. வேப்பிலை தலை தோலை சுத்தமாக வைத்துவிட்டு, முடி வேர்களை வலுப்படுத்துகிறது. இதனால் முடி உதிர்வை குறைத்து, புதிய முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. 

வேப்பிலையை நீரில் கொதிக்கவைத்து அந்த நீரை தலைமுடிக்கு அரிப்பதோடு, குளிக்கவும் பயன்படுத்தலாம். வேப்பிலை விழுதாகவும், பவுடர் ஆகவும்  பயன்படுத்தலாம். இது கொப்பளிப்பை குறைத்து, தலை தோலில் ஈரப்பதம் தரும். வாரத்தில் 1–2 முறை இதைப் பயன்படுத்துவதால் முடி உதிர்வு கட்டுப்பட்டு, தலைமுடி ஆரோக்கியமாக வளரும். வேப்பிலை போன்ற இயற்கையான மருந்துகள் ரசாயனமின்றி பாதுகாப்பாக செயல்படுவதால், நீடித்த முடி வளர்ச்சிக்கு சிறந்த தீர்வாகும். 

கத்தாழை (Aloe Vera):

கத்தாழை முடி உதிர்தலைக் குறைக்கும் ஒரு இயற்கையான மற்றும் பலதரப்பட்ட நன்மைகள் கொண்ட மூலிகையாகும். இதில் உள்ள வைட்டமின்கள் ஏ, சி, இ  மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் தலைமுடி தோலை சுத்தமாக வைத்துக் கொள்கின்றன மற்றும் முடி வேர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. 

கத்தாழை ஜெல்லை நேரடியாக தலைமுடியில் தேய்த்து 30 நிமிடங்கள் வைக்க வேண்டும்; இது இரத்த ஓட்டத்தை தூண்டி வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்தலைத் தடுக்கிறது. மேலும், இது கொப்பளிப்பு, உலர்ச்சி, மற்றும் அரிப்பை குறைத்து தலைமுடிக்கு ஈரப்பதம் வழங்குகிறது. வாரத்தில் 2 முறை கத்தாழை ஜெல் பயன்படுத்துவது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.ரசாயனங்கள் இல்லாமல் இயற்கையாக முடி பராமரிக்க விரும்பும் நபர்களுக்கு கத்தாழை ஒரு சிறந்த தேர்வாகும்.


தலை முடி வளர்ச்சிக்கு உதவும் வீட்டு முறை வைத்தியம் இயற்கையான பொருட்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் பாதுகாப்பான மற்றும் செலவில்லா தீர்வாகும். தேங்காய் எண்ணெய், வெந்தயம், கருவேப்பிலை,தயிர், வேப்பிலை மற்றும் வெங்காயம் போன்றவை தலைமுடிக்கு முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்கும். தைராய்டு, ஸ்ட்ரெஸ், அல்லது ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்பட்ட முடி உதிர்வை சீர்செய்ய கீரை வகைகள், முட்டை, நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகமுள்ள உணவுகளை உணவில் சேர்க்க வேண்டும். வாரத்தில் இரண்டு முறை தலைக்கு எண்ணெய் மசாஜ் செய்தல் மற்றும் இயற்கை ஹேர் மாஸ்க் போடுதல், தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். இவ்வாறு,வீட்டில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தி இயற்கையாக முடி வளர்ச்சியை மேம்படுத்தும் சிறந்த இயற்கையான குறிப்பு முறை இதோ உங்களுக்காக!!!


தேவையான பொருட்கள்:


                                                      வெந்தயப் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன் 
                                                      

                                                      கருவேப்பிலை பவுடர் - 3 டேபிள் ஸ்பூன் 
                                                      

                                                      வேப்ப இலை பவுடர் - 1 டேபிள் ஸ்பூன் 


வெந்தயப் பவுடர்,  கருவேப்பிலை பவுடர், வேப்பஇலை பவுடர் ஆகிய மூன்றையும் மாவு போல் அரைத்து  காற்று புகாத பாக்ஸில் வைத்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு  ஹேர் பேக் சீக்கிரமாக செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும். 


                                                      சின்ன வெங்காயம் - 6 


                                                     ஆலிவேரா ஜெல் - தேவையான அளவு 


                                                     தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு 


வெந்தயப் பவுடர்,  கருவேப்பிலை பவுடர், வேப்பஇலை பவுடர்  இவை அனைத்தையும் சேர்த்து  நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்  சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஆலிவேரா ஜெல், தேங்காய் எண்ணெய் இவை இரண்டையும் தேவையான அளவு எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். அவளவுதான் ஈஸியான வீட்டு முறை ஹேர் பேக் தயார்.

வாரத்திற்கு இரண்டு முறை இந்த ஹேர் பேக்கை தொடர்ந்து செய்தால் உங்கள் தலை முடி அடர்த்தியாகவும், மென்மையாகவும், நீளமாகவும் மாறியிருப்பதை உணர்வீர்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த ஹேர் பேக் முடிக்குள் இருக்கும் தேவையற்ற பூச்சிகள் அனைத்தையும் அழித்து விடும். மூன்று மாதத்தில் தலை முடியில் நல்ல மாற்றம் ஏற்படும். 


              



















Post a Comment

0 Comments