Ad Code

Best Morning Natural Drink without Milk:பால் இல்லாமல் சிறந்த காலை இயற்கை பானம் | Beauty Tips in Tamil

பால் கலக்காத இயற்கை பானம் 

பால் கலக்காத இயற்கை பானம் தயாரித்துக் குடிப்பதால் இளமையுடனும், ஆரோக்கியமாகவும் வாழலாம். அதற்க்கான வழிமுறைகளை இப்பொது பார்க்கலாம். 


 பால் கலக்காத இயற்கை பானங்களில் ஏழு உள்ளனர். அவை துளசி இலை டீ, ஆவாரம்பூ டீ, செம்பருத்திப்பூ டீ, கொத்தமல்லி டீ,  புதினா இலை டீ, கொய்யா இலை டீ, முருங்கை கீரை டீ. 


துளசி இலை டீ:


சில துளசி இலைகளை நீரில்  கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது ஆரோக்கியத்தையும், இளமைத்தோற்றத்தையும் அளிக்கும். 


ஆவாரம்பூ டீ:


காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலும்பிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து வாரம் ஒரு முறை சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும். 


செம்பருத்திப்பூ டீ:


ஒற்றை செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி எலும்பிச்சைப் பழச்சாறு, வெல்லம் கலந்து டீயாகச் சுவைக்கலாம்.


கொத்தமல்லி டீ:


கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருக வேண்டும்.


 புதினா இலை டீ:


புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.

 

கொய்யா இலை டீ:


கொய்யா இலைகளை நீரில்  கொதிக்க வைத்து ஏலக்காய்,வெல்லம் சேர்க்க வேண்டும்.


முருங்கை கீரை டீ:


முருங்கை இலை, எலுமிச்சை இலை இரண்டையும் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்தால் மணமிக்க முருங்கைக் கீரை டீ ரெடி.


குறிப்பு:


டீ வாசம் வேண்டும் என்றால் சிறிது டீ துளை சேர்த்துக் கொள்ளலாம். பனைவெல்லம், நாட்டுச்சக்கரை சேர்ப்பது தான் மிக நல்லது.

 


Post a Comment

0 Comments