முகம், தலைமுடி மற்றும் உடலில் எந்த பாகத்தை பராமரிப்பதற்கும் முதலில் இயற்கை குறிப்பு முறையை பயன்படுத்துங்கள். ஏனென்றால், இயற்கை குறிப்புமுறை முறை நமக்கு பக்கவிளைவுகளை தராது மற்றும் இறுதிவரை கைகொடுப்பதும் இயற்கை முறைதான். என்றுமே உடலின் பராமரிப்புக்கு இயற்கை முறைதான் சிறந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வீட்டிலே இயற்கையான முறையில் தலைமுடியை நேராகவும் பளப்பளப்பாகவும் மாற்றுவது எப்படி என்பதை இப்பொது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- ஆலோவேரா தண்டு - 2
- வாழைப்பழம் - 6 பீஸ்()
- முட்டை - 1 (முட்டையில் இருக்கும் மஞ்சள் கருவை எடுத்துவிடுங்கள்)
- தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
- சுத்தமான தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
முதலில், தாவரத்தில் இருந்து எடுத்த ஆலிவேரா தண்டை எடுத்து வரும்போது நொடித்த பகுதியில் மஞ்சள் நிறத்தில் துர்நாற்றம் அடிக்கும். துர்நாற்றத்தை போக்க 30 நிமிடத்திற்கு வெளியில் தண்ணீர் ஊற்றி அதில் இந்த ஆலிவேரா தண்டை வையுங்கள். 30 நிமிடம் கழித்து ஆலிவேரா தண்டை எடுத்து தோலை நீக்கி உள்ளே இருக்கும் ஜெல்லை ஒரு பாத்திரத்தில் வைக்கவும். பின் அதில் வாழைப்பழம், முட்டையை சேர்த்து கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் இந்த மூன்றையும் போட்டு மென்மையாக அரைத்துக்கொள்ளுங்கள்.அரைத்துவைத்ததுடன், தயிர் மற்றும் சுத்தமான தேங்காய் எண்ணெயை சேர்த்து அனைத்தும் ஒன்றோடு ஒன்று சேருமாறு நன்கு கலக்கி கொள்ளுங்கள். அவ்வளவுதான் சூப்பரான இயற்கை முறை ஹேர்பேக் தயார். வாரத்திற்கு ஒருமுறை இந்த ஹேர்பேக்கை செய்யுங்கள். தலை முடி ஆரோக்கியமாகவும், பளப்பளப்பாகவும், நேராகவும் இருக்கும்.
சரியான உணவு, போதுமான நீர், எண்ணெய் மசாஜ், ஹேர் மாஸ்க் போன்றவை தலைமுடிக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை தரும். இதனை தொடர்ந்து செய்யுங்கள். இதனால் தலைமுடி ஆரோக்கியமாக, பளபளப்பாகவும், நேராகவும் மாறி உங்களை அழகான தோற்றத்துடன் காணச் செய்யும்.
0 Comments
Comments