தோல் மனித அழகின் பிரதான பகுதியாக அமைந்துள்ளது. மனிதனின் உடலில் காணப்படும் நிறம், தனித்துவமான தோற்றத்தை உருவாக்குகிறது. பொதுவாக, மனிதர்களுக்கு கருப்பு, மஞ்சள், வெள்ளை போன்ற பல்வேறு தோல் நிறங்கள் உள்ளன. சிலருக்கு இயற்கையாகவே கருப்புப் நிறத் தோல் அதிகம் காணப்படும். இந்த கருப்பு நிறப்பெண்கள் மற்றும் ஆண்கள், சில சமயங்களில் சூரிய ஒளி, வயது, ஹார்மோன் மாற்றங்கள், அல்லது பிற காரணங்களால் கருமை நிறத்திலோ அல்லது ப்ரவுன் நிறத்திலோ காணப்படலாம்.அவ்வாறு தோன்றும் பெண்கள் மற்றும் ஆண்கள், மீண்டும் இயற்கையான வெள்ளை நிறத்திற்கு திரும்புவதற்கு, சரியான பராமரிப்பு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் அவசியமாகின்றன. இதனை பொறுமையுடன் மேற்கொண்டால் உடலில் நல்ல மாற்றம் கிடைக்கும்.
இப்பொது இருக்கும் காலக்கட்டத்தில் அதிகப்பற்றமான பெண்கள் மற்றும் ஆண்கள் அழகு நிலையத்திற்கு சென்று முகம் மற்றும் உடலைப் பராமரிக்க சிகிச்சை மேற்கொள்வது சாதாரணமாகிவிட்டது . சிகிச்சை எடுப்பதற்கு முன் தன்னைத்தானே சிந்தித்துக் கொள்வது மிக அவசியம்.ஏனென்றால், இச்சிகிச்சை நிரந்தரமில்லை என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். மேலும், உடலில் நிறைய பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அதுமட்டுமில்லாமல் செயற்கை ரசாயனத்தால் செய்யப்பட்ட முகம் மற்றும் உடலுக்கு பயன்படுத்தும் அழகுப் பொருட்கள் வாங்குபவர்களும் அதிகம் பேர் உள்ளனர். இதனையும் தவிர்ப்பது மிக நல்லது.
இயற்கையான அழகை மேற்கொள்வதற்கு என்றுமே சிறந்தது வீட்டுமுறை வழிமுறைகள் தான். வீட்டில் மற்றும் கடைகளில் இருக்கும் எளியப் பொருட்களை வைத்தே முகம் மற்றும் உடலை எளிய முறையில் பராமரிக்கலாம். கொரிய நாட்டில் வசிக்கும் பெண்கள் பெருபாலானோர் வீட்டு முறையைத்தான் பின்பற்றுகிறார்கள். அவர்கள் முகத்தை அழகுபடுத்த பயன்படுத்தும் எளிய முறை பேஸ்பேக் எப்படி தயாரிப்பது என்று இப்பொது விரிவாகப் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்:
அரிசி -1/2 கப்
ஆலோவேரா ஜெல் - 2 டேபிள்ஸ்பூன்
காய்ச்சப் பால் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
சுத்தமான தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
வைட்டமின் இ கேப்ஸூயுல் - 1
ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு அதில் தண்ணீரை ஊற்றி 2 மணிநேரம் அரிசியை ஊற வைத்துக்கொள்ளுங்கள். பின் தண்ணியுடன் அரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு மென்மையாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்து வைய்த்திருந்த அரிசியுடன் ஆலோவேரா ஜெல், காய்ச்சப் பால், சுத்தமான தேங்காய் எண்ணெய், வைட்டமின் இ கேப்ஸூயுல் ஆகியவற்றை சேர்த்து ஒன்றோடு ஒன்று சேருமாறு நன்கு கலந்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் முகத்தை பளபளப்பாகவும் வெண்மையாகவும் மாற்றும் பேஸ்பேக் தயார்.
இதனை முகத்தில் தடவி 5 -10 நிமிடம் கைகளை வைத்து முகத்தில் நன்கு ஸ்க்ரப் செய்யுங்கள்.பின் முகத்தை கழுவுங்கள். வாரத்திற்கு இரு முறை இந்த பேஸ்பேக்கை பயன்படுத்துங்கள். முகத்தில் நல்ல மாற்றம் வரும். முகத்திற்கு மட்டும் இல்லாமல் உடலில் எந்த பகுதி கருமையாக இருந்தாலும் அதில் பயன்படுத்தலாம்.
0 Comments
Comments