உடல் பருமனை எளிமையான முறையில் குறைக்க ஏதேனும் மருந்து இருக்கிறதா? உடல் பருமனை மருந்தே இல்லாமல் குறைக்க முடியுமா? காலையில் வாக்கிங் சென்றால் உடல் பருமன் குறையுமா? பத்து வருடத்திற்கு முன் இருந்த எடைக்குக் குறைய இயலுமா? இப்படி அடுக்கடுக்கான கேள்விகளுடனும், யோசனையுடனும் உடல் பருமனாகிவிட்டவர்கள் யோசிக்கிறார்கள். "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்..."என ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள்.
உடல் பருமனை உணவுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் எளிதில் குறைக்க முடியும். முதலில் நாவின் ருசியைக் கட்டுப்படுத்த வேண்டும்.இயற்கை உணவுகள் மற்றும் குறைந்த கலோரி கொண்ட உணவுகளைத் தேர்ந்தெடுத்தல் மூலம் உடல் பருமனில் இருந்து விடுபடலாம். வேகவைக்காத பச்சை உணவுகளில், குறைந்த அளவு வெப்பசக்தி(கலோரி) காணப்படுவதால், உடல் பருமனைக் குறைப்பதில் இயற்கை உணவுகளே மிகச் சிறந்த மருந்தாகும்.
தினமும் மூன்று வேலையும் (காலை, மாலை, இரவு) சாப்பிடும் உணவு முறைகள்:
காலை உணவை கண்டிப்பாக ஒன்பது மணிக்குள் எடுக்க வேண்டும். இரண்டு டம்ளர் ராகி கஞ்சி(அல்லது) 4 அல்லது 6 இட்லி, கொத்தமல்லி சட்னியுடன் சாப்பிடலாம். கோஸ், பீன்ஸ், செள செளபோன்றவைகளைச் சேர்த்து சூப்பாகச் செய்து பருகலாம்.. கீரைவகைகள் நிறைய உள்ளனர். அதிலும் சூப் செய்து பருகலாம்.காய்கறி சாலட் மற்றும் பழக்கலவை செய்தும் சாப்பிடலாம். இது உடலுக்கு அதிக சத்துக்களையும் ,புரோட்டீன்களையும் தர வல்லது.
மதிய உணவைக் கண்டிப்பாகப் பகல் 1.30க்குள் எடுக்க வேண்டும். மதியநேரம் திருப்தியாகச் சாப்பிடுங்கள். சாப்பாடு-சாம்பார்-ரசம் -சேர்க்கச் கூடிய காய்கறிகள் -கீரைகள் பழங்கள் அனைத்தும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இரவு நேரம் உணவை 7.30 மணிக்குள் சாப்பிட்டு முடித்துவிட வேண்டும். இட்லி, தோசை, கோதுமைமாவு தோசை மற்றும் சப்பாத்தி சாப்பிடுவது நல்லது. இரவு உணவை சாப்பிட பின், தண்ணீர் தவிர வேறெதுவும் விடியும் வரை சாப்பிடக் கூடாது. டைட்டில் இருந்தால் பப்பாளி, மாதுளைப்பழம், சாத்துக்குடி, கொய்யா, ஆரஞ்சு, அத்திப்பழம், வெள்ளரிக்காய் இவைகளை தேவையான அளவு எடுத்து இரவு நேரம் சாப்பிடலாம். இரவு உணவுக்கும், காலை உணவுக்கும் இடையே குறைந்தபட்சம் 12 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும். இத்தகைய உணவு முறைகள் சரியாக 6 முதல் 8 மாதங்கள் வரை இருந்தாலே, சராசரி உடல் எடைக்குத் திரும்பிவிடலாம். `
உணவு முறை சுழற்சியைக் கடைபிடிக்கும் பொழுது மிகுந்த களைப்பு உண்டானால், பத்துநாட்களுக்கு ஒருமுறை இயல்பான உணவுமுறையை மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து மேற்கொண்டு, மீண்டும் இந்த முறைக்குத் திரும்புங்கள் திரும்புங்கள். எளிதான உடற்பயிற்சியுடன் நான் சொன்ன உணவு முறை சுழற்சியைப் பழக்கப்படுத்துங்கள். கண்டிப்பாக உடல் எடை குறையும்.
முளைக்கட்டிய பயிறு சலட்:

முளைக்கட்டிய பச்சைப்பயிறு -50 கிராம்
முளைக்கட்டிய கொண்டைக்கடலை - 50 கிராம்
சிறிதாக அரிந்த வெங்காயம் - 25 கிராம்
சிறிதாக அரிந்த தக்காளி - 50 கிராம்
தேங்காய்த் துருவல் - 1 தேக்கரண்டி
இவை அனைத்தையும் நன்றாகக் கலந்து, இத்துடன்
எலுமிச்சைச்சாறு - 2 தேக்கரண்டி
தேன் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
இவைகளையும் ஒன்றாகக் கலந்து, காலை உணவாகக் கொள்ளவும். உடலுக்கு ஊட்டம் தரும் குறைந்த கலோரித்திறன் கொண்ட உணவாகும். இதில் கொழுப்புச்சத்து இல்லை. இதை தினசரி ஒரு வேளை உணவாகக்
கொண்டால், அதிக உடல் எடை குறைந்து, சீரான, ஸ்லிம்மான உடல் எடையைப் பெறலாம்.
பழக்கலவை(சாலட்)
விதையில்லாத திராட்சை - 50 கிராம்
அன்னாச்சிப்பழத்துண்டு - 50 கிராம்
விதைநீக்கிய ஆரஞ்சுகலவை - 50 கிராம்
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
கேரட் துருவல் - 50 கிராம்
இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, இதில்
புதினா அரைத்த விழுது - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி அரைத்த விழுது - 1 தேக்கரண்டி
தயிர் - 1 கப்
உப்பு தேவையான அளவு
வெள்ளை மிளகுதூள் தேவையான அளவு
இவைகளை கலந்து வைத்துக்கொள்ளவும். அதனை மதிய உணவாகக் கொண்டால், உடல் எடை மற்றும் தொப்பையை எளிதில் குறைத்து விடலாம். இந்த இயற்கை உணவு பபல்வேறு உடல் உபாதைகளைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது.
வெள்ளரி - பூசணி இயற்கை பானம்
வெள்ளரித்துண்டுகள் - 100 கிராம்
வெண்பூசணித் துண்டுகள் - 100 கிராம்
வெள்ளை மிளகு - 10 கிராம்
ஏலரிசி - 10 கிராம்
எலுமிச்சை சாறு - 50 மிலி
தேன் - 25மிலி
வெள்ளரி, வெண்பூசணித் துண்டுகளை மிக்சியில் அரைத்து, அத்துடன் மேற்கண்டவைகளையும் சேர்க்கவும். அவ்வளவுதான் உடல் பருமன், தொப்பயைக்குறைக்கும் சுவையான பானம் தயார்...பிரசவத்திற்கு பின் ஏற்படும் தொப்பை நீங்க, இதனை வாரம் 3 முறை சாப்பிட மிகச் சிறந்த பலன் தரும். மேலும் பெண்களுக்கு மாதவிடாயின் போது காணப்படும் வயிற்று வலி, அதிக உதிரப்போக்கு போன்றவற்றிற்கும் சிறந்த ஒரு பானம்.
உடல் பருமனை குறைக்கும் கொள்ளுப்பால்:
கொள்ளை நன்றாக ஊறவைத்து முளைக்கட்டி வைக்கவும். மறுநாள் இதை எடுத்து, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துப் பால் எடுக்கவும். இதனை தினசரி ஒருவேளை சாப்பிட்டு வர, உடல்பருமன், தொப்பை மற்றும் கொழுப்பு, ஊளைச்சதை கரையும்.
0 Comments
Comments