பல வண்ணங்களில் பிரகாசித்து, ரசனைக்கு இனிமையையும், கண்களுக்கு ரசனையையும் தரும் அருஞ்சுவைப் பழங்கள், நம் உடலுக்கு தேவைப்படும் பல்வேறு ஊட்டச்சத்துக்களை மிக இயல்பாகவே தருகின்றனர். ஒவ்வொரு பழமும் தனித்துவமான சுவை, மணம் மற்றும் பயன்களைக் கொண்டது. வைட்டமின்கள், மினரல்கள், நார்ச்சத்து, ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்ததால், ஆரோக்கியத்தை காக்கவும், நோய்களை தடுப்பதிலும், இளமையை தக்க வைக்கவும் அருஞ்சுவைப் பழங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
பழங்களின் சிறந்தப் பலன்கள்:
இரவு முழுக்க ஜீரணம் ஓய்வெடுத்து, காலையில் உடல் சக்தியற்ற நிலையில் இருக்கும்.அப்போது பழங்களில் உள்ள இயற்பழங்களில் நிறைந்திருக்கும் நார்ச்சத்து, குடல் இயக்கத்தை தூண்டி செரிமானத்தை சீராக்குகிறது. வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களை தடுக்கும் திறனை உயர்த்துகின்றன. அதிகமான தண்ணீர் சத்து உடலை ஹைட்ரேட் செய்து, தோலுக்கு ஈரப்பதத்தை வழங்கி, சூரியனில் இருந்து காத்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க செய்யும்.
பழங்களில் உள்ள ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் உடல்ச் செல்களை பாதுகாத்து, விரைவில் முதிர்வதைத் தடுக்கும். மேலும் காலை நேரத்தில் பழங்களை சாப்பிடுவது உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு மிக நல்லது.வழக்கமாக காலையில் பழங்களைச் சாப்பிடுபவர்கள் உடல் எடையை கட்டுப்படுத்தவும், கொழுப்பை குறைக்கவும் வாய்ப்பு அதிகம். இது ஹார்மோன்களை சமநிலைப்படுத்தி, தினசரி செயல்பாட்டை சீராக வைத்திருக்க உதவுகிறது. எனவே காலை நேரத்தில் பழங்களை சாப்பிடுவது ஆரோக்கியமான வாழ்க்கையின் சிறந்த படியாகும்.
தினமும் காலை வேளையில் சாப்பிட வேண்டிய சிறந்தப் பழங்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
ஆப்பிள் பழம்:
காலை வேளையில் ஆப்பிள் பழம் சாப்பிடுவது உடலுக்கு மிக நல்லது. ஆப்பிள் நார்ச்சத்து (fiber) மிக அதிகம் கொண்ட பழம் என்பதால் காலி வயிற்றில் சாப்பிடும் போது ஜீரணத்தை தூண்டி குடல் சுத்தமாக இருக்க உதவுகிறது. இதில் உள்ள பெக்டின் எனும் தன்மை குடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை சுறுசுறுப்பாக வைக்கும். அதே சமயம் இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும். அதிக கலோரி இல்லாததால் எடை குறைக்க விரும்புபவர்கள் இதை காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
மேலும் ஆப்பிள் தினசரி உட்கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கெட்ட கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தோலை இளமையாக வைத்திருக்கவும் உதவியாக இருக்கும். ரத்த சர்க்கரையை நிலைப்படுத்தும் ஆற்றலும் இதில் உள்ளது. ஆதலால், ஆப்பிள் பழத்தை தினசரி காலை வேளையில் உட்கொள்ளுவது மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்க முடியும்.
வாழைப்பழம்:
வாழைப்பழம் கால்சியம், பொட்டாசியம், மற்றும் நார்ச்சத்து நிறைந்தது என்பதால் காலை நேரத்தில் இதனை உட்கொள்வது எலும்புகள் மற்றும் தசைகள் திடமாக இருக்க உதவுகிறது. இதில் உள்ள கார்போஹைட்ரேட் உடனடி சக்தியை வழங்கி, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்கச் செய்கிறது. வாழைப்பழம் ஜீரணத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும். இது வயிற்றில் அசிடிட்டி ஏற்படாமல் பாதுகாக்கும். மேலும், இதய ஆரோக்கியத்தையும் கட்டுபடுத்தி, இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.
இதில் உள்ள வைட்டமின் பி6 மனநலத்தை தூண்டி மனச்சோர்வை குறைக்க உதவும். வாழைப்பழத்தில் நிறைந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தோல் மற்றும் முடியை அழகாகவும் வைத்திருக்க உதவும். இப்படிப் பலன்களை அளிக்கும் வாழைப்பழத்தை காலை நேரத்தில் சாப்பிடுவது முழு உடலுக்கும் ஆரோக்கியத்தை பலனையும் தரும்.
மாதுளைப்பழம்:
மாதுளைப்பழம் வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாது சத்துக்களில் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. காலை நேரத்தில் வெறும் வயிற்றில் இதை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவும். மாதுளைப்பழம் இரத்தத்தை சுத்தமாக்கி, ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்கிறது.
இது இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொண்டு இதயத்தை பாதுகாக்கும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் இருக்கும் திசுக்களை அழுகிய நிலையிலிருந்து காக்கும். மேலும், மாதுளைப்பழம் ஜீரண சக்தியை தூண்டும், குடல் சுகத்தை மேம்படுத்தும் மற்றும் மலச்சிக்கலை தவிர்க்கவும் உதவி புரியும். காலை நேரத்தில் மாதுளையை சாப்பிடுவதால் நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்புடன் இருக்கும். தோல் ஆரோக்கியம் மேம்பட்டு, இளமை தோற்றம் நீடிக்கும்.
பப்பாளிப்பழம்:
பப்பாளி மிக அதிக நார்ச்சத்து கொண்டது என்பதால், காலையில் வெறும் வயிற்றில் இதை சாப்பிடுவது ஜீரணத்தை தூண்டி குடலை சுத்தமாக வைத்திருக்க உதவும். இதில் உள்ள பப்பைன் எனும் எஞ்சைம் அஜீரணத்தை நீக்கி, அசிடிட்டி மற்றும் மலச்சிக்கலை குறைக்கும். வைட்டமின் ஏ மற்றும் சி அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், தோல் கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்கவும் பப்பாளி துணைப் புரிகிறது. மேலும் பப்பாளியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி, மனச்சோர்வை தாழ்த்துகின்றன.
இது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. காலையில் பப்பாளி சாப்பிடுவது நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாகவும் இலகுவாகவும் வைத்திருக்கச் செய்கிறது. மேலும் இதில் நீர் சத்து அதிகமாக இருப்பதால் உடல் ஹைட்ரேட்டாகவும் இருக்கும்.
திராச்சைப்பழம்:
திராட்சைப்பழம் நீர் சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது என்பதால், காலையில் இதை சாப்பிடுவது உடலை உடனே ஹைட்ரேட் செய்து புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது. இதில் உள்ள ரெஸ்வெராட்ரால் (Resveratrol) என்ற சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். வைட்டமின் சி மற்றும் கே அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும்.
திராட்சை ஜீரணத்தை மேம்படுத்தி குடல் சுகத்தை பேணுகிறது, அதே நேரம் மலச்சிக்கலை தவிர்க்கவும் உதவுகிறது. இதில் உள்ள இயற்கை சர்க்கரை உடனடி சக்தியை வழங்கி, காலை நேரத்தில் தினசரி பணிகளை செய்ய உற்சாகம் தருகிறது. தோல் மற்றும் முடி ஆரோக்கியத்தையும் இது பாதுகாக்கிறது. மேலும் மூளையின் செயல்பாட்டையும் தூண்டி, மன அழுத்தத்தை குறைக்கும் தன்மையும் திராச்சைப்பழம் கொண்டுள்ளது.
கொய்யாப்பழம்:
கொய்யாப்பழம் நார்ச்சத்து மிகுந்தது என்பதால் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஜீரணத்தை தூண்டி குடலை சுத்தமாக வைத்திருக்க உதவும். இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பலமாக்கி சளி, காய்ச்சல் போன்ற சிறு நோய்கள் வராமல் தடுக்கும். கொய்யாப்பழம் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்ற உணவாக இருக்கிறது. மேலும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி கொழுப்பு திரட்டாமல் பாதுகாக்கும்.
இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் லைகோபீன் போன்ற பொருட்கள் உடலில் சத்துக்களை உறிஞ்சும் செயல்முறையை மேம்படுத்தும். தோல் பளிச்சென்றும் இளமையாகவும் இருக்க கொய்யாப்பழம் உதவும். மேலும், இது உடலை நீர் இழப்பிலிருந்து காக்கவும், நாள்பட்ட கான்ஸ்டிபேஷன் பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் உதவுகிறது.
காலை வேளையில் பழங்களைச் சாப்பிடுவது ஆரோக்கிய வாழ்க்கைக்கான மிகச் சிறந்த தொடக்கமாகும்.நீண்ட இரவுக்குப் பிறகு உடல் புத்துணர்ச்சி தேடும் அந்த தருணத்தில், பழங்கள் நமக்கு தேவையான சக்தியையும் ஊட்டச்சத்துகளையும் எளிதாக அளிக்கின்றன. தோலை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்திருக்க பழங்களின் பங்கு அளப்பரியது. மேலும் மன அழுத்தத்தை குறைத்து, நமக்கு நாளை தைரியமாக எதிர்கொள்ளும்.
தொடர்ந்து காலை உணவாக பழங்களை சாப்பிட்டால், நாம் நம் உடலை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், நோயற்ற வாழ்வை மகிழ்ச்சியாக அனுபவிக்கவும் முடியும். அதனால் தினமும் காலை வேளையில் பழங்களை சாப்பிட்டு ஆரோக்கியமாகவும் சந்தோசமாகவும் இருங்கள். வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
0 Comments
Comments