Ad Code

What Happens When You Drink Water on an Empty Stomach:அதிகாலையில் வெறும் வயிற்றியில் தண்ணீர் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் - கட்டாயம் பாருங்க

மனித உடலின் செயல்பாடுகள் அனைத்தும் திரவப் பரிமாற்றத்தையே பெருமளவில் சார்ந்துள்ளன. இதில் முக்கியப் பங்கு வகிப்பது  தண்ணீர். அதிகாலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முதல் தளமாகக் கருதப்படுகிறது. உடலை சுத்தமாக வைத்திருக்கவும், உறுப்பு செயல்களைச் சரியாக இயங்க வைக்கவும் தண்ணீர் மிக முக்கிய பங்கு வகுக்கிறது. இரவு முழுவதும் தூக்கத்தில் இருந்த உடல், அதிகாலை நேரத்தில் தண்ணீரை நாடுகிறது. 



அந்த நேரத்தில் பருகப்படும் தண்ணீர், உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகளை வழங்குகிறது.  குறிப்பாக, சருமத்திலிருந்து செரிமான மண்டலம் வரை பல்வேறு உடல் பகுதிகளின் செயல்பாடுகளை தூண்டுகிறது. பண்டைய ஆயுர்வேத முறைகளில் கூட இதன் மகத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாள்  முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கவும், உடலின் நச்சுகளை வெளியேற்றவும் இந்த பழக்கத்தைத் தொடர்வது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

தண்ணீர் குடிக்க சிறந்த நேரம்:




அதிகாலை எழுந்த உடனே,  2 முதல் 3 கிளாஸ் சுடு (இளஞ்சுடு) நீர் பருகுவது சிறந்தது.

பின்பு 30 நிமிடங்கள் கழித்து  காலை உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

முகவாசனையை (Bad breath) குறைக்கும்:

அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவது, முகவாசனையை (Bad breath) குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். இரவில் தூங்கும் போது வாயில் தண்ணீர் சுரப்பு குறையும், இதனால் பாக்டீரியாக்கள் உருவாகி வாசனை ஏற்படுகிறது. அதிகாலையில் தண்ணீர் பருகுவதன் மூலம், அவை வாயிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. இது நாக்கின் மேல் சிக்கிய நச்சுப் பொருட்களையும் கழுவி எடுக்கும். 



தொடர்ந்து தண்ணீர் குடிப்பது வாயை ஈரமாக வைத்துக்கொண்டு பாக்டீரியாக்கள் பெருகுவதைத் தடுக்கும். இதனால், இயற்கையாகவே முகவாசனை குறையும். தினமும் இந்த பழக்கத்தை பின்பற்றுவதால் வாயின் சுகாதாரமும் மேம்படும்.

நோய்யெதிர்ப்பு சக்தியை (Immunity) இயற்கையாக அதிகரிக்கும்:

 இரவில் உடலில் தேங்கிய நச்சுப்பொருட்கள், காலையில் தண்ணீர் பருகுவதால் சிறுநீராக வெளியேறி உடல் சுத்தமாகிறது. சுத்தமான உடலில் உயிரணுக்கள் சிறப்பாக செயல்பட்டு நோய்களை எதிர்க்கும் திறன் அதிகரிக்கிறது. மேலும், தண்ணீர் உடலில் உள்ள செல்களை ஈரமாக வைத்திருப்பதன் மூலம் அவை தங்களது செயல்பாடுகளை சீராக மேற்கொள்கின்றன. 



ரத்த ஓட்டம் மேம்படுவதால் நோய் எதிர்ப்பு உடைகள் (White blood cells) பலப்படுகின்றன. தண்ணீரால் உடலின் சுற்றுச்சுழற்சி வலுப்பெற்று, உடல் எப்போதும் சுறுசுறுப்பாகவும், நோய்கள் தாக்க இயலாத நிலையாகவும் மாறுகிறது.

மூளை செயல்பாடுகளை அதிகரிக்கும்:

அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவது, மூளை செயல்பாடுகளை அதிகரிக்க செய்கின்றனர். நம் மூளை சுமார் 70% தண்ணீரால் ஆனது என்பதால், தண்ணீர் குறைவாக இருக்கும் போது கவனம், நினைவாற்றல், மற்றும் சிந்தனை திறன் பாதிக்கப்படலாம். அதிகாலை தண்ணீர் பருகுவதன் மூலம், மூளைக்கு தேவையான நீர்ச்சத்து கிடைத்து நரம்பியல் செயற்பாடு சீராக இயங்குகிறது. 



இது மன அழுத்தத்தை குறைத்து, புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க உதவுகிறது. மேலும், தண்ணீர் உடலின் சுற்றுச்சுழற்சியை மேம்படுத்துவதால், மூளைக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் சிறப்பாக கிடைக்கின்றன. இதனால், ஒருநாளுக்கான புத்துணர்ச்சியும், கவனமும் அதிகரிக்கிறது.


நச்சுக்களை வெளியேற்ற உதவும்:

அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவது, உடலிலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதற்கு சிறந்ததாக இருக்கிறது. இரவில் உறங்கும் போது உடலில் கழிவுகள், நச்சுகள் ஆகியவை சேரும். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும்போது, அந்த நச்சுகள் சிறுநீராக வெளியேற துவங்கும். 




இது சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவி செய்கின்றனர். மேலும், குடல் மற்றும் செரிமான மண்டலத்தில் உள்ள கழிவுகளும் வெளியேறவும் துணை செய்கின்றனர்.இது உடலை சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க செய்கின்றனர்.

மூட்டு வலிகள் மற்றும் உடல் வலிகளை குறைக்கும்:

தண்ணீர் உடலின் திரவ சமநிலையைச் சீர்படுத்தி, மூட்டுகளில் உள்ள சுரப்பு திரவங்களை (synovial fluid) பாதுகாக்கிறது. இது மூட்டுகளில் நன்கு ஒதுக்கி இயக்கத்தை எளிதாக்குகிறது. தண்ணீரால் தசை நரம்புகள் சீராக இயங்கி, வலிகளைக்  குறைக்கிறது. மேலும், தண்ணீர் உடலில் உள்ள அழற்சி தன்மையை குறைத்து, தசை வீக்கம் மற்றும் வலியை தணிக்கிறது. 




காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவதால், நச்சுப்பொருட்கள் வெளியேறி, உடல் சுத்தமாகி, வலிகளை ஏற்படுத்தும் காரணிகள் நீங்குகின்றன. தினசரி தண்ணீர் பருகும் பழக்கம் இருந்தால்,மூட்டு மற்றும் உடல் வலிகளை கட்டுப்படுத்த முடியும்.

கவனத்தில் கொள்ளுங்கள்:




  1. தண்ணீர் இளஞ்சுடுவாக பருகினால் உடலின் ஆரோக்கியத்திற்கு நல்ல பலன் கொடுக்கும்.
  2. ஒரே நேரத்தில் அதிகமாக குடிக்காமல் மெதுவாக பருக வேண்டும்.
  3. உணவுக்குப் பின் உடனே தண்ணீர் குடிக்க வேண்டாம்.

ஆழமான பயன்களை தரக்கூடிய ஒரு பழக்கம் தான் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவது. நாள்  முழுவதும் புத்துணர்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்வதற்கான  சிறந்த ஆரம்பமாக இது அமைகிறது. இயற்கையான முறையில் உடலை பராமரிக்க விரும்புபவர்கள், இந்த பழக்கத்தை தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் இணைத்துக்கொள்ள வேண்டும். இது உங்கள் உடலுக்கும் மனதுக்கும் நீண்டநாள் நன்மைகளைத் தரும். 




Post a Comment

0 Comments